உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை கடல் எல்லையை ட்ரோனில் கண்காணிக்க திட்டம்

இலங்கை கடல் எல்லையை ட்ரோனில் கண்காணிக்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: “இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு தொடர்பான பணியை, பறக்கும் கண்காணிப்பு கருவியான ட்ரோன் வாயிலாக கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது,” என, இந்திய காவல்படையின் கிழக்கு, வட கிழக்கு மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் டோனி மைக்கேல் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு வந்த அவர் கூறியதாவது:கடலில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள், போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க, இந்தியா - இலங்கை கடலோர காவல் படை சார்பில் கூட்டு ரோந்து செல்ல ஆலோசனை நடக்கிறது. இருநாட்டு கடலோரங்களில் சர்வதேச கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக, ட்ரோனில் கண்காணிக்கும் பணி துவங்கப்படவுள்ளது. கடலோர காவல் படைக்கு, 60 நவீன ரோந்து படகுகள் புதிதாக வரவுள்ளன.இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களால் இரு நாடுகளுக்கும் பாதகம் ஏற்படும். மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எல்லை தாண்ட வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம்.எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்குவதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. அதை பாதுகாக்க, 100 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ray
ஜன 27, 2025 10:28

தலைமன்னார் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மீனவர்களும் சிங்களவர்களில்லை மாறாக தமிழர்களேயல்லவா யார் மீன் பிடித்தாலென்ன சிங்களவர்களுக்கேனிந்த வன்மம்? அது நீண்டநாள் குடைச்சல் ஸ்டெர்லைட் ஜல்லிக்கட்டு வரிசையில் புதிய குடைச்சல் டங்ஸ்டன் சுரங்கம் அடுத்து என்ன வருமோ பார்க்கலாம் அண்ணாமலை பின்னாடியும் சிலர் ஓடறவங்களைத்தான் சொல்லோணும்


அப்பாவி
ஜன 27, 2025 09:47

இலங்கைப் பக்கம் ஓடிப்போற மீன்களை இந்தப் பக்கம் ஓட்டி விட ஏதாவது டெக்னாலஜி கண்டுபிடிங்க.


Muguntharajan
ஜன 27, 2025 07:27

முதலில் கடல் எல்லையில் 24 மணி நேரமும் இருந்து அங்கே கடல் எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புங்கள். தமிழக மீனவர்களின் உயிரும் உடமைகளும் இலங்கை கடற்படை யிடம் சிக்காமல் இருக்குமாறு உதவுங்கள்


N.Purushothaman
ஜன 27, 2025 07:14

இரு நாட்டு கடற்படையும் கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம் ...இல்லையெனில் போதை மருந்து கடத்தல் கும்பலை கட்டுப்படுத்துவது சவாலாகி விடும் ...அதன் மூலம் எல்லை தாண்டும் மீனவர்களையும் கண்காணிக்க முடியும் ...


rama adhavan
ஜன 27, 2025 07:00

வானத்திலும் கடலிலும் ஒரு நாட்டின் எல்லையை அறிவியல் முறையில் தான் கணிக்க முடியும். இதன்படித்தான் விமானங்கள் செயல் படுகின்றன. படகுகளும் அப்படியே. ஆனால் தமிழக மீனவர்களுக்கு வேண்டும் என்றே கருவி இருந்தும் எல்லை மீறுகிறார்கள். அதனால் தான் துன்பம். இங்குள்ள அரசியல்வாதிகளும் இவர்களுக்கு சப்போர்ட். எனவே பிரச்சனை என்றும் தீராது.


Ray
ஜன 27, 2025 06:26

THEY NEEDED THE HELP OF HIS BROTHER KUMBHAKARNA, WHO WOKE UP ONLY AFTER 1,000 ELEPHANTS WALKED OVER HIM.


Kasimani Baskaran
ஜன 27, 2025 05:52

இரண்டு நாடுகளுக்கிடையிலான தூரம் மிகக்குறைவு என்பதால் கடல் எல்லை என்பது அவ்வளவு தெளிவாக வரையறுக்க முடியாது. இரண்டு நாட்டு வீரர்களும் சேர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டால் சிக்கல்களை குறைக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை