உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சிறிய ரக விமானம் தரை இறங்கியது.புதுக்கோட்டை அருகே கீரனூர் பகுதியில் திடீரென சாலையில் சிறிய ரக விமானம் தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவிர்க்க இயலாத சூழ்நிலையில், திடீரென சாலையில் தரையிறக்கப்பட்டுள்ளது.விமானம் தரையிறங்கும் போது, அந்த வழியில் வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. தற்போது விமானம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து மட்டுமே இருக்கும் தார் சாலையில், திடீரென விமானம் தரை இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பேர், விமானத்தை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். விமானி உட்பட இருவர் காயமடைந்து உள்ளனர். சிறிய ரக விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹிந்தி மொழி

விமானிகள் இருவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். விமானிகள் இருவரும் ஹிந்தி மொழி பேசினர். இவர்களுக்கு தமிழ் மொழி தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்சி விமான நிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

saravan
நவ 13, 2025 17:46

சாலைப்போக்குவரது சிறப்பாக இருந்ததே அதிமுக ஆட்சியில் தான்


என்றும் இந்தியன்
நவ 13, 2025 17:06

வாகன போக்குவரத்து எதுவும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. ???அப்படின்னா ரோடு சரியில்லையா???அதனால் தான் தட்டுத்தடுமாறி விமானம் இறங்கி அந்த சாலையில் ஆட்டம் கொண்டதா?? அதனால் ஹான் முன்பகுதி சேதமடைந்ததா???


karisatti
நவ 13, 2025 16:25

இப்போது போடுகின்ற புது சாலைகள் விமானம் இறங்குவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதாலும் மிக அகல பாதைகள் போடப்படுகின்றன . புதுக்கோட்டை சாலை அவ்வாறு அகலமாக லாவிடிலும் பாதுகாப்பாக தரை இறங்கியது விமானம் . மகிழ்ச்சி


Kumaresan
நவ 13, 2025 15:37

வாசன் இதுவரைக்கும் தி மு க ஆட்சியில ரோடு போடலை , புதுசா பாலம் கட்டலை , சும்மா பக்கவாத்தியம் வாசிக்க வேண்டாம்.


duruvasar
நவ 13, 2025 14:29

பரந்தூர் என நினைத்து விட்டாரகள் போல் தெரிகிறது.


Vasan
நவ 13, 2025 14:19

மழைக்காலங்களில் கூட, அவசர காலத்தில் விமானம் இறக்கும் அளவுக்கு சாலையை அருமையாக அமைத்து அதனை பராமரிக்கும் திமுக அரசாங்கத்திற்கு உள்ளங்கனிந்த பாராட்டுக்கள்.


Ganesh
நவ 13, 2025 14:40

சார், எதுனால விமானிகளுக்கு அடிபட்டுச்சுன்னு கேக்கலேயே.... டேமேஜ் ஆனா ரோடு னால தான் சார்...


V K
நவ 13, 2025 14:43

மத்திய அரசால் பராமரிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை


V.Mohan
நவ 13, 2025 14:48

ஆமாம் சிறிய பயிற்சி விமானம் அவசரத்தில் தரை இறங்க எந்த ரோடானாலும் சரி அது இறங்கும் இறங்கித்தான் ஆக வேண்டும். அதை வைத்து திமுக ஆட்சிக்கு ஒத்து ஊதும் அளவுக்கு பாராட்டுவது ஓவர் பீலா. உங்களுக்கு முக்கியமாக தெரியாத விஷயம் என்னன்னா அந்த ரோடு அதிமுக ஆட்சியில் போடப்பட்டது ஒரு பாயிண்ட், அதில் அதிக டிராஃபிக் இல்லைங்கறதும் இன்னொரு பாய்ண்ட். சும்மா எல்லா சமாசாரத்துக்,ம் திமுக வுக்கு ""சாம்பிராணி"" போடாதீங்க


subramanian
நவ 13, 2025 15:30

டேய்...டேய்... அது மோடிஜி போட்ட ரோடு ....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி