உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டீ கடைகளில் பிரச்னை பண்ணாதீங்க ப்ளீஸ்; கட்சியினருக்கு திருமா அட்வைஸ்

டீ கடைகளில் பிரச்னை பண்ணாதீங்க ப்ளீஸ்; கட்சியினருக்கு திருமா அட்வைஸ்

சென்னை: 'திருச்சி கூட்டத்துக்கு வருவோர், டீக்கடை, ஹோட்டல்களில் பிரச்னை செய்யக்கூடாது' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அக்கட்சியினரை அறிவுறுத்தி உள்ளார். வக்ப் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 'மதச்சார்பின்மையை காப்போம்' என்ற பெயரில் பேரணியை, திருச்சியில் நாளை மறுநாள் வி.சி.க., நடத்துகிறது.

இதுகுறித்து, திருமாவளவன் கூறியதாவது:

பேரணியில் பங்கேற்பவர்கள், கட்சிக்கொடியின் நீல நிற ஆடை அணிந்து வர வேண்டும். 'கோட் சூட்' அணிந்தும் பங்கேற்கலாம். பெண்களுக்கு, பிரத்யேக 'மொபைல் டாய்லெட்' அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களும் தயாராக உள்ளன. தமிழகம் முழுதும் இருந்து வரும் கட்சியினர், வாகனங்களை ஏதேனும் ஒரு இடத்தில் நிறுத்தி, 'உணவு அருந்தினோம்; குடிநீர் அருந்தினோம்; டீ அருந்தினோம்; அதனால் பிரச்னை ஏற்பட்டது' என்ற சூழலை ஏற்படுத்தக்கூடாது. அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது. தங்கள் ஊர்களில் இருந்தே உணவு, குடிநீர் எடுத்து வர வேண்டும். எதற்காகவும் இடையில் வண்டியை நிறுத்த வேண்டாம். இந்த விஷயத்தில், கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMESH
ஜூன் 18, 2025 13:38

இவருக்கு கிடைக்கும் அனுமதி முருக பக்தர்கள் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டியது உள்ளது.....மத சார்பின்மை என்று பொய் கூறும் மதவாதி......இந்துக்கு பிரச்சினை என்றால் ஓடி ஒளிந்து கொள்ளும் பயல்........


Natanasabapathy pillai
ஜூன் 14, 2025 19:18

இவருக்கு மட்டும் கேட்ட உடன் அனுமதி கிடைக்கிறதே எப்படி தி மு க வுக்கு காவடி தூக்குவதாலா


Lkanth
ஜூன் 13, 2025 06:42

தமிழ் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு முதல் காரணம் . இவர் ஒழிஞ்சாதான் தமிழ் நாடு உருப்படும். முஸ்லிம்களே அமைதியாக இருக்கும் போது இவர் எதுக்கு மாநாடு நடத்துறார்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 12, 2025 09:41

இந்த பேரணிக்கு போலிஸ் அனுமதி வழங்கி இருக்குமே..இதில் ஏதும் அசம்பாவிதம், பொதுமக்களுக்கு தொந்தரவு வராது என்று போலிஸே நீதிமன்றங்களுக்கு உறுதி அளித்திருக்குமே.....!!!


nagendhiran
ஜூன் 12, 2025 06:24

இவனுங்க பிரச்சனை செய்யாத இடம் உண்டா? இவணுங்களுக்கு ஒரு பிரம்ம அஸ்திரம் இருக்கும் வரை இவணுங்களை எதுவும் செய்ய முடியாது?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 06:09

இனிமேல் கட்சியினர் டி கடைகளில் காசுகொடுத்து டி , வடை , டிபன் சாப்பிட வேண்டுமா ...என்ன கொடுமை இது ..இதை நாடும் நாடு மக்களும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் ... வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்


essemm
ஜூன் 12, 2025 06:01

வாய்யா திருமா. என்ன மத நல்லிணக்காத்தை பற்றி யாருயாரெல்லாம் பேசறது என்ற ஒரு விவசாதையே இல்லாமல் போயிருச்சு. அதுவும் வி சி க கட்சிகாரங்களுக்கு அட்வைஸ் வேற அவங்க கேட்ட மாதிரிதான். அவங்க வருவதே. பிரச்சினையை பண்ணி கட்சி மேலிடத்தில் தனக்கு நல்ல பேர் கிடைக்கவேண்டும் என்பதற்கும். ரௌடி தனம் பண்றதுக்கும் தானே. இனி ஏதாவது உங்க ஆளுங்க லொள்ளு பண்ணினா அப்புறம் தெரியும். செருப்படி போது மக்களிடம் வாங்கி கற்றிக்கொண்டு தான் ஊருக்கு திரும்புவார்கள். இந்த தேர்தலில் நீயும் உங்கட்சியும் மண்ணை கவ்வ போறது என்னமோ உறுதியாகதெரியுது.


எவர்கிங்
ஜூன் 12, 2025 05:54

அடங்க மறு மனித எரு என்று சொனனவன்தானே நீயு


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 07:30

டீ குடிக்கும்போது அடங்கமறு ... அதற்க்கு காசு கேட்டால் அத்துமீறி நட .. சரக்கு மிடுக்குடன் .போண்டா பஜ்ஜியை தின்று தீர்த்திடு .. காரபூந்தியை கண்டால் சிறுத்தய் போல் பாய்ந்து கைப்பற்றி சாப்பிடு ...


சமீபத்திய செய்தி