உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்: அண்ணாமலை

இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீபெரும்புதூர்: ‛‛ இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்்ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்த போது பேசுகையில், சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில்11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது தான் பா.ஜ., அரசின் சாதனை.மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ளோம். சீனாவாக இருக்கட்டும், பாகிஸ்தானாக இருக்கட்டும், எந்த பிரச்னையும் இல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.திருவள்ளூரில் பா.ஜ., வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து அண்ணாமலை பேசுகையில், பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது. 33 மாதங்களில், தி.மு.க., 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. மத்திய அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 72 பேர் அமைச்சர்களாக உள்ளனர். 45 லட்சம் விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் கொடுக்கும் ஆட்சி தான் பாஜ.,. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Azar Mufeen
மார் 30, 2024 03:40

45 லட்சம் விவசாயிகளுக்கு மாதம் 6ஆயிரம் கொடுக்கும் ஆட்சி பாஜக அப்போ அது வருடம் இல்லையா கோபால்?


chennai sivakumar
மார் 29, 2024 18:34

Precisely sir Our south Indians will realise if china tries to enter back door via Sri Lanka


chennai sivakumar
மார் 29, 2024 18:32

இங்கே வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொல்லை காட்சியை பார்ப்பவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பு பற்றி ஒன்றும் தெரிய வாய்ப்பு இல்லை


Lion Drsekar
மார் 29, 2024 16:58

தற்போதைய நிலைப்பாடு எங்களுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை, ஆனால் யாரும் மக்களுக்கு எதுவும் செய்யக்கூடாது , மக்கள் ஒற்றுமையாக வாழவும் கூடாது வெளிநாட்டின் கைக்கூலிகளாக செயல்பட்டால் மட்டுமே பேச்சுரிமை, எழுத்துரிமை, எல்லாமே இருக்கும், இதை மீறி செயல்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு நீதிமன்றம் என்று முடிவில் தலைமை நீதிமன்றம் வரை சென்று எங்கு செல்கிறதோ உலகம் இந்த புனித தத்துவம் உலக நாடுகள் அனைத்துக்குமே பொருத்தமாக இருக்கிறது தான் வாழவேண்டும், தான் நினைத்தது நடக்கவேண்டும்,


Palanisamy Sekar
மார் 29, 2024 16:45

பாஜக பத்தாண்டுகளில் என்ன செய்தது என்று தெரியாத தற்குறிகளுக்கு அண்ணாமலையின் விவரமான பேச்சில் அதுபற்றி தெரிந்துகொள்ளட்டும் நாற்பத்தைந்து லட்சம் பேர் விவசாயிகள் மட்டுமே எவ்வளவு பலனை பெற்றுள்ளனர் என்று தெரிந்துகொள்ளட்டுமே முத்ரா கடன் பெற்றவர்களில் பெண்களில் தமிழகத்தில் தான் அதிகம் பேர் என்பதை அறியாத செங்கல் திருடர்கள் இனியாவது தெரிந்துகொள்ளட்டும் பாதையோர வியாபாரிகளுக்கும் கூட கடனுதவி மானியத்துடன் கொடுத்தவர் மோடிஜி அவர்கள்தான் படித்தவர்களுக்கு தொழில் புரிய மானியத்துடன் கடனுதவி செய்துகொண்டிருப்பவர் மோடிஜி தான் இலவச அரிசியை மத்திய தொகுப்பிலிருந்து நாடெங்கும் பல மாதங்களாக கொடுத்துவருபவர் நமது மோடிஜி தான் இதெல்லாம் தெளிவாக சொல்லத்தான் போதிய ஊடக துணையில்லை காரணம் தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் திமுகவின் வசமாக இருப்பதால் இருட்டடிப்பு செய்துவிடுகின்றார்கள்


முருகன்
மார் 29, 2024 16:28

இத்தனை வருடங்கள் யார் இந்தியாவை அச்சுறுத்தியது மக்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் தான் இருந்தார்கள்


N. Srinivasan
மார் 29, 2024 17:07

People in South India are relatively safe compared to North Mumbai Terrorist attack,


vijay
மார் 29, 2024 16:05

superr


Kumar
மார் 29, 2024 15:24

எப்படி பேச முடிகிறது


N. Srinivasan
மார் 29, 2024 16:29

what is wrong in this statement? For the past Years No Terrorist attack across the country We have come to the stage of recalling Army


N. Srinivasan
மார் 29, 2024 16:29

what is wrong in this statement? For the past Years No Terrorist attack across the country We have come to the stage of recalling Army


N. Srinivasan
மார் 29, 2024 16:30

What is wrong in this statement?? keeping silent and JK has become a peaceful state


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை