உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் விதிகளை பிரதமர் மீறியுள்ளார்: முத்தரசன்

தேர்தல் விதிகளை பிரதமர் மீறியுள்ளார்: முத்தரசன்

சென்னை:'தேர்தல் விதிகளை மீறும் வகையில், பிரதமர் மோடி கோவையில் பிரசாரம் செய்துள்ளார்' என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் கூறினார்.சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள், மத்திய அரசின் தவறான கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கூரை மேல் அமைக்கப்படும் சோலார் மின் உற்பத்திக்கு நிர்ணயம் செய்யப்படும் நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவை, முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று முத்தரசன் வழங்கினார். பின், முத்தரசன் கூறியதாவது:தேர்தல் விதிகளை மீறும் வகையில், பிரதமர் மோடி கோவையில் பிரசாரம் செய்துள்ளார். பள்ளி குழந்தைகளை தெருவில் நிறுத்தி வரவேற்பு வழங்குவது போல் செய்தது விதிமுறை மீறல். இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை