உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு

இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லிமாசோல்: இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c9tk4ohv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சைப்ரஸின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கவுரவித்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:எதிர்காலத்தில், எங்கள் செயலில் உள்ள கூட்டாண்மை புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகளாவிய சூழலை உருவாக்குவதற்கும் பங்களிப்போம். கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதுக்காக, சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் மரியாதை ஆகும். இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.இந்த விருது அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நமது மக்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Thaihir VM
ஜூன் 18, 2025 00:35

140 கோடி இந்தியர்களை மதித்து தான் இந்த விருதே வழங்கப்படுகிறது இதில் அர்பணிக்க ஒன்றுமில்லை


Ramaraj P
ஜூன் 17, 2025 07:35

எரியுதடி மாலா ஃபேன 12 நம்பலர்ல வை.


அப்பாவி
ஜூன் 17, 2025 06:37

விருது குடுத்தாத்தான் வருவேன்னு சொல்லியிருப்பாரோ?


Tetra
ஜூன் 16, 2025 21:48

இந்த விருது வச்சுக்குன்னு என்ன பண்றது.


P. SRINIVASAN
ஜூன் 16, 2025 19:41

இந்த விருதை நீங்களே வைத்து கொள்ளுங்கள்.


சிட்டுக்குருவி
ஜூன் 16, 2025 18:29

மகா உன்னத மனிதர் .எங்குசென்றாலும் தன் மக்களை உடன் அழைத்துசெல்கின்றார் .தான் பெற்றதை எல்லோருக்குமானதாக்குகிறார் .தன்மக்களின் கௌரவத்தை Gauravam தாங்கிப்பிடித்து உயர்த்துகிறார் . உலகளவில் இந்தியாவின் எளிமை நற்பண்புகளை பரப்புகிறார் .உலகளவில் மக்களின் செல்வராகின்றார் .கடவுள் ஒருவரே அற்புதங்கள் தான் வேறுவேறு என்பதை நிரூபிக்கின்றார் ஈன்ற பொழிதினும் பெரிதுவக்கும் பாரத தாய் வாழ்க வளமுடன்


போராளி
ஜூன் 16, 2025 23:39

அந்த 1500000 எங்கனு கேட்டு சொல்லு முட்டுக்குருவி


Chanakyan
ஜூன் 16, 2025 17:01

ஒரு இந்தியரை குறைச்சுக்கோங்க மோடி அவர்களே. இவருக்கு வேணாமாம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 16, 2025 16:56

முக்கியமாக வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவை இழிவாக பேசும் வயிற்றெரிச்சல் பிடித்த பப்புவையும் சேர்த்து சமர்ப்பணம் செய்துள்ளார். இந்த பெரும் குணம் எந்த காங்கிரஸ்காரனுக்கும் கிடையாது.


விருதுநகர்வீரையா
ஜூன் 16, 2025 15:23

விருது மகாத்மியம் எப்போ ஓயுமோ?


vivek
ஜூன் 16, 2025 17:32

தெரியுமா கற்பூர வாசனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை