உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி

திருச்சி: வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷே கம் நடக்கவுள்ளது. இதற்கென பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டுள்ளார். ஆந்திராவில் வீரபத்ரன் ,கேரளாவில் குருவாயூர், கோயில் சென்று வழிபட்டார். இதன் தொடர்ச்சியாக பிரதமர்3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் பிரதமர் மோடி இன்று (ஜன.,20) சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்கென பிரதமர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் வந்த அவர் கார் மூலம் கோயிலுக்கு சென்றார். வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8fh3nu92&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0Gallery வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு பட்டர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ரங்கநாதர், ராமானுஜர் , கருடாழ்வார் , சக்கரத்தாழ்வார் சன்னதியில் பிரதமர் வழிபட்டார்.

வேஷ்டியில் பிரதமர்

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய வேஷ்டி அணிந்து வந்தார். பொன்னாடை போர்த்தியபடி கை கூப்பி வணங்கியபடி சென்றார் பிரதமர்

ரசித்தார் மோடி

கம்பராமாயண மண்டபத்தில் பிரதமர் மோடி அமர்ந்தார். அவரது முன்னிலையில் இருவர் கம்பராமாயண கடவுள் வாழ்த்து பாடலை பாடினர். கம்பராமாயண பாடலை பிரதமர் மோடி ரசித்தார்.

ராமேஸ்வரம்

மதியம் 2 மணிக்கு பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்தார். இன்று இரவு அங்கு தங்குகிறார். இதையடுத்து, நாளை (ஜன.,21) அவர் தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோயிலுக்கு செல்கிறார்.

ஸ்ரீராமர் பூஜித்த ராமேஸ்வரம் திருத்தலம்

ராமர் இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு ராமேஸ்வரம் வந்தார். சிவபக்தரான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபெருமானை பூஜை செய்ய முடிவெடுத்தார்.இதற்காக சிவலிங்கம் எடுத்து வரச்சொல்லி ஹனுமனை கைலாய மலைக்கு சீதாதேவி அனுப்பினார். ஆனால் ஹனுமன் வர தாமதமானதால் சீதை கடற்கரை மணலில் சிவலிங்கம் வடிவமைத்து பூஜை செய்து அனைவரும் தரிசித்தனர். இங்கு ஸ்ரீ ராமர் சிவனை பூஜித்து வணங்கியதால் சுவாமிக்கு ராமநாதசுவாமி என பெயரிட்டனர்.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ராமர் பூஜித்த இத்திருத்தலத்திற்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஜன.,22ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி இன்று(ஜன.,20) ராமேஸ்வரம் கோயிலில் அக்னி தீர்த்தத்திலும், கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.

புனித தீர்த்தம்

இந்த ராமாயண இதிகாச வரலாற்று திருத்தலம் குறித்து ராமேஸ்வரம் பஜ்ரங்தாஸ் பாபா மடம் நிர்வாகி மகராஜ் சீதாராம்தாஸ் பாபா கூறியதாவது: ராமபிரான் சிவனை பூஜித்து வணங்கிய இடத்தில் உள்ள இக்கோயில் வளாகத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பூமியில் ராமர் அம்பு எய்ததும் புனித தீர்த்தம் கிடைத்தது.இது கங்கை, காவிரி உள்ளிட்ட பல புனித நதிகளின் தீர்த்தத்தை உள்ளடக்கிய தீர்த்தமாக கருதப்பட்டதால் இதனை 'கோடி தீர்த்தம்' (22 வது தீர்த்தம்) என்றழைக்கப்படுகிறது. இன்றும் இந்த தீர்த்தம் மட்டுமே கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அடைக்கலம் தேடி தனுஷ்கோடி வந்த ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக அறிவித்த ராமர் கடல் நீரால் பட்டாபிஷேகம் சூட்டுகிறார்.சிவனின் ஆயுதமான கோதண்டம் (வில், அம்பு ) ராமரிடம் இருந்ததால் சிவ பக்தரான விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டியதால் இங்கு கோதண்ட ராமர் கோயில் உருவானது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாதம் பதித்த ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் இக்கோயிலின் புனிதமும், புகழும், வரலாறும் உலகம் முழுவதும் சென்றடையும் என்றார்.

கட்டுப்பாடு விதிப்பு

பிரதமர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. திருச்சியில் இன்று மதியம் 2 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி