உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பிரதமர் மோடி வாழ்த்து

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை: 'எம்.ஜி.ஆரின் முயற்சிகளால், நாம் பெரிதும் எழுச்சி பெற்றுள்ளோம்' என, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, அவர் வெளியிட்ட அறிக்கை:எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், மேம்பட்ட சமூகத்தை கட்டமைக்கவும், அவர் மேற்கொண்ட முயற்சிகளால், நாம் பெரிதும் எழுச்சி பெற்றுஉள்ளோம். த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் அறிக்கை:அளவற்ற வறுமையை தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றை சுக்குநுாறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும் எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள் வணக்கம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை