உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடியில் ரூ.4,800 கோடிக்கு திட்டங்கள்; துவக்கி வைத்தார் பிரதமர்

தூத்துக்குடியில் ரூ.4,800 கோடிக்கு திட்டங்கள்; துவக்கி வைத்தார் பிரதமர்

தூத்துக்குடி: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, தூத்துக்குடியில் நடந்த விழாவில் 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று இரவு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மோடிக்கு, திருவள்ளுவர் சிலையினை தங்கம் தென்னரசு பரிசாக வழங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=56e7b2at&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டடத்தை துவக்கி வைத்தார்.மொத்தம், 17,340 சதுர மீட்டரில், நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ஆண்டுக்கு, 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையது. இதனால், தென்மாவட்டங்களில், சுற்றுலாவும், முதலீடும் அதிகரிக்கும். பின்,விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில், 2,350 கோடி ரூபாய் செலவில், 50 கி.மீ., நீளத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் நான்கு வழிச்சாலை; 200 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துாத்துக்குடி துறைமுக சாலையின் ஆறு வழிப்பாதை போன்றவற்றை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், 285 கோடி ரூபாயில், ஆண்டுக்கு, 69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறனில் அமைக்கப்பட்டுள்ள, வடக்கு சரக்கு தளவாட நிலையம் - 3ஐயும் திறந்து வைத்தார்.மதுரை - தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் ரயில் பாதையில், 90 கி.மீ., மின்மயமாக்கல் பணி; நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி பிரிவின் 21 கி.மீ., இரட்டைப் பாதை, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு 12.87 கி.மீ., மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம், 3.6 கி.மீ., பிரிவுகளின் இரட்டை பாதைப்பணி 1,165 கோடி ரூபாயில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இவற்றையும் துவக்கி வைத்தார்.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்படும் தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் இருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்வதுடன், மின் வழித்தட பணிக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திட்டச்செலவு, 550 கோடி ரூபாய்.துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்த பின், திருச்சி செல்லும் பிரதமர் மோடி, இரவு அங்கு தங்குகிறார். நாளை அரியலுார் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் அவர், முதலாம் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் வகையில், நினைவு நாணயம் வெளியிடுகிறார். சோழபுரம் கோவிலில் நடக்கும், ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். பிறகு திருச்சியில் இருந்து டில்லி செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 27, 2025 20:16

மதுரை எயிம்ஸ் கதி தான், எத்தனை பத்தாண்டுகள் ஆகுமோ. அடிக்கல் எல்லாம் ...கற்களாக..


venugopal s
ஜூலை 27, 2025 10:55

தூத்துக்குடிக்கும் வடை செய்து கொடுத்து விட்டாரா?


Ramesh Sargam
ஜூலை 26, 2025 21:08

பிரதமர் தமிழகம் வந்தால் பலகோடி திட்டங்கள் அறிவிப்பார் என்று பயந்துதான், தமிழக முதல்வருக்கு பயம் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


பாமரன்
ஜூலை 26, 2025 20:59

என்னா நெஞ்சழுத்தம் இந்த திராவிஷமாடலுக்கு.... பக்கத்துலதானே பாஞ்சாயிரம் கோடி வின்ஃபாஸ்ட் ப்ளாண்ட் ரெடியா இருக்கு... அதுல போயி கொடியாட்ட கூப்பிட்டா வரமாட்டேன்னா சொல்ல போறாப்ல நம் பெஷலிஸ்ட்... அடுத்த வாரம் தான் தான் ரிப்பன் கட் பண்ணுவேன்னு அடம் புடிச்சி வச்சிட்டிருக்காங்க... அந்த காரை பகோடாஸ் ஆரும் வாங்கி அண்ணந்தண்ணி பொழங்கக்கூடாது... அக்காங்... முடிஞ்சா நிம்மியாண்ட சொல்லி ஈடியை சுவரேறி குதிச்சி போயி இன்னான்னு பாக்க சொல்லோனும்... கல்நெஞ்சக்காரங்க...


vivek
ஜூலை 26, 2025 22:37

பாவம் பாமரன்...பெத்தவங்க சோறு போடலை...வெறும் பகோடா சாப்பிட்டே வளர்ந்திருப்பார் போல...


டாஸ் மாஸ்
ஜூலை 26, 2025 20:55

அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். 100 கோடி கேஜ்ரி சோலிய முடிச்சிட்டிங்க. 1000 கோடிக்கு எப்ப? விரைவில் முடிக்க வேண்டுகிறோம்


krishnan
ஜூலை 26, 2025 20:40

நன்றி ஐயா, உங்கள் காலத்தில் செய்யப்படும் மக்கள் பணிகள் யாவும் என்றும் நன்றியுடன் நினைவு வைக்கப்படும் வந்தே மாதரம்


Svs Yaadum oore
ஜூலை 26, 2025 20:35

துாத்துக்குடியில் எந்த திட்டமும் தொடங்கும் முன் அங்குள்ள மதம் மாற்றும் கும்பலின் முன் அனுமதி பெற்று செயல்படுத்துவது ரொம்ப நல்லது ... இல்லையென்றால் ரூ.4,800 கோடியில் 2000 கோடிகள் செலவு செய்த பிறகு மதம் மாற்றும் கும்பல் இந்த திட்டங்களை பாதியில் நிறுத்தும் ...உடன்குடி அனல் மின் திட்டம் பல ஆண்டுகளாக தாமதம் ....ராமநாதபுரம் உப்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க வழக்கு தொடர்ந்து 35 சதவீத பணிகளுடன் கட்டுமானம் முடங்கியது...இதற்கு உச்ச நீதிமன்றம் தடை நீக்கிய பிறகும் பிறகும் கட்டுமான பணி மீண்டும் துவங்கவில்லை....


Rameshmoorthy
ஜூலை 26, 2025 20:19

Country development first not ₹200


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 26, 2025 20:09

முங்கி முக்கி முக்குளிச்சாலும் ஒத்தை வோட்டு கூட தேறாது.


எஸ் எஸ்
ஜூலை 26, 2025 20:29

ஓட்டுக்கு திட்டங்கள் கொண்டு வரும் வழக்கம் கழகங்களுக்கு மட்டுமே. மோடி தேச பக்தர். வளர்ச்சியை சிந்திப்பவர். தமிழர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள்


G Mahalingam
ஜூலை 26, 2025 20:48

வோட்டு தேவை இல்லை. கோட்டுக்கு அலைபவர்கள் திமுகதான்


நடராஜன்,சிவகங்கை
ஜூலை 26, 2025 20:55

எப்பவும் இப்படி தேசத்திற்கு எதிராகவே பேசிக்கிட்டு திரிஞ்சின்னா கண்டிப்பாக ஒருநாள் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு விரட்டி அடிக்கப்படுவாய் ஜாக்கிரதை...


Kumar Kumzi
ஜூலை 27, 2025 00:30

ரோஹிங்கியாபுரம் கருத்து சொல்ல வந்துட்டான் ஹாஹாஹா


புதிய வீடியோ