உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு: பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

அன்புமணி பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு: பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாமல்லபுரம்: அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டு தொடருவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், அவரின் மகன் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் கோர்ட் வரை சென்றுவிட்டது. ஆக.19ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ஒரு பக்கம் ராமதாஸ் அறிவிக்க, மறுபுறம் தாமும் ஆக.9ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார்.அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவை அடுத்து, திட்டமிட்டபடி இன்று தாம் அறிவித்த பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி தொடங்கி உள்ளார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என அழைப்பிதழ் அனுப்பப்பட்ட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழுக் கூட்ட பேனரில், ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ராமதாசுக்காக பொதுக்குழு கூட்ட மேடையில் காலி இருக்கை விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறும் பொருட்டும், சட்டசபை தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணி குறித்த நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பாமக தலைவராக தேர்வான அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் முடிந்தது. எனவே, பாமகவின் தலைவராக மீண்டும் அன்புமணியை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. பாமக கட்சி தொடங்கியதில் இருந்து, ராமதாஸ் இல்லாமல் நடத்தப்படும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; * பாமக தலைவராக அன்புமணி தான் மேலும் ஓராண்டு தொடருவார். உட்கட்சி தேர்தல் நடத்தலாம். * பாமக பொருளாளராக திலக பாமா, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் தொடர தீர்மானம் நிறைவேற்றம். * ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதை வெளியிட வேண்டும்.* வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.*தமிழகத்தில் மின்கட்டணத்தை நிறைவேற்ற வேண்டும்.*காவிரி, கொள்ளிடம், பாலாறு ஆகிய ஆறுகள் இடையே தடுப்பணை கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 09, 2025 21:27

பாஜகவில் ஐக்கியமாகும் வரை என்று தீர்மானம் போட்டிருக்கலாம்


கூத்தாடி வாக்கியம்
ஆக 09, 2025 16:47

ஆக அப்பா மகன் சண்டை எல்லா கட்சியிலும் இருந்தது. இருக்கிறது. ரெண்டு மூணு பொண்டாட்டி கட்டி இருபது புள்ள பெத்தவங்க சத்தம் போடாம இருக்காங்க . நீ ஏன்யா சலம்புரீங்க


Jack
ஆக 09, 2025 13:46

சிறைநிரப்பும் போராட்டம் நடத்தினால் பத்து பேர் வர மாட்டாங்க .. நேரம் சரியில்ல .. அடக்கி வாசிப்பதே நல்லது .. ஒரு வேளை அப்பா திமுக கூட்டணி மகன் அதிமுக கூட்டணி நாடகமா?


SUBBU,MADURAI
ஆக 09, 2025 14:09

அப்பனும் மகனும் பண்ற கேலிக் கூத்தை பார்த்து நமக்கு கடும் எரிச்சல்தான் ஏற்படுகிறது. பெரிய மாங்காய் இவர் நடத்தும் கூட்டத்திற்கு எதிராக வழக்கு போடுவாராம் ஆனால் இந்த சின்ன மாங்காய் அப்பனுக்காக ஒரு காலியான நாற்காலியை போடுவாராம் இவருக்கு தான் ஒரு ராமனின் தம்பி பரதன் என்று நினைப்பு...


Venkatesan Ramasamay
ஆக 09, 2025 13:03

எல்லாமே எதிர்வரும் தேர்தலுக்கான ...மிகப்பெரிய அப்பா மகன் நடத்தும் நாடகம். நாடகம். நாடகம். பாவம் தொண்டர்கள் ...


Oviya Vijay
ஆக 09, 2025 12:47

இவ்வளவு கூத்துக்களுக்கும் ஒரே விடை "பிதுங்கின மாங்கா" மட்டுமே... வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கே இவர்களால் தீர்வு காண முடியவில்லையே... இதில் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் இவர்கள் முடிவு காணப் போகிறார்களா என்ன... பாமக என்பது தமிழகத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்கு பெற்ற கட்சியல்ல... ஏதோ ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே இவர்களால் தங்கள் பலத்தைக் காட்ட முடியும்... ஆகையால் இவர்களுக்கு மீடியாக்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை... பத்தோடு ஒன்னு பதினொன்னு என்பது போல் தான் தமிழகத்தில் இவர்களது கட்சியும்... இவர்களே தேவையில்லாத ஆணி... இவர்கள் சேரப்போகும் இடமும் (அதிமுக பாஜக கூட்டணி) தமிழகத்துக்குத் தேவையில்லாத ஒன்று தான்... தேர்தலில் மக்கள் இவர்களை மொத்தமாகத் தூக்கியெறியப் போகிறார்கள்...


Jack
ஆக 09, 2025 16:38

பிதுங்கின மாங்கா ..பிதுக்கின மாங்கா ..மாத்தி எழுதலியே


முதல் தமிழன்
ஆக 09, 2025 12:30

ட்ராமா கட்சி பொட்டி வாங்கும் கட்சி வேஸ்ட்


புதிய வீடியோ