உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு தேர்தலில் பாடம் கிடைக்கும்: அன்புமணி காட்டம்

சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு தேர்தலில் பாடம் கிடைக்கும்: அன்புமணி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; காவல்துறையையும், சட்டம் - ஒழுங்கையும் சீர்குலைத்த திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை மக்கள் அளிப்பார்கள் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; தூத்துக்குடி நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட பார்வை மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இரு சகோதரர்களை கஞ்சா போதைக் கும்பல் கொலை செய்து கால்வாயில் புதைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரிக்கிறது என்பதற்கும், கஞ்சா விற்பனை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கும் இதை விட கொடூரமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது. தூத்துக்குடி தெர்மல் நகரையடுத்த பண்டுக்கரையைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரது வீட்டின் கதவை கடந்த ஜூலை 27ம் தேதி இரவில் கஞ்சா போதை கும்பல் தட்டி தகராறு செய்துள்ளது. அவர்களை சின்னத்துரையின் புதல்வரும் பார்வை மாற்றுத் திறனாளியான மாரிப்பாண்டியும், அவரது சகோதர் அருள்ராஜும் கண்டித்துள்ளனர். அதற்கு அடுத்த நாள் காலை முதல் அவர்களைக் காணவில்லை. இந்த நிலையில் தான் அவர்கள் இருவரின் உடல்களும் அருகில் உள்ள கால்வாயில் புதைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைக் கும்பல் தான் அவர்களை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கஞ்சா விற்பனையையும் தடுக்க முடியவில்லை; கஞ்சா போதையில் படுகொலை செய்பவர்களையும் தமிழக காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை என்றால் அவர்கள் என்ன பணி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழத்தில் கஞ்சா விற்பனை தொடங்கி கொலை உள்ளிட்ட பல வகையான குற்றங்களைச் செய்பவர்களுக்கும் ஆளுங்கட்சியில் செல்வாக்கு படைத்த யாரோ ஒருவரின் ஆதரவு இருக்கிறது. அதனால் தான் அவர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் குற்றங்களைக் கூட காவல்துறையால் தடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவல்துறையை நிர்வகித்து வரும் முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.தமிழகத்தில் நிகழும் சட்டவிரோத செயல்கள், சட்டம் - ஒழுங்கு மீறல்கள் ஆகியவற்றை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். தமிழகத்தில் அரசும், காவல்துறையும் உள்ளனவா? என்று அவர்கள் வினா எழுப்புகிறார்கள். காவல்துறையையும், சட்டம் - ஒழுங்கையும் சீர்குலைத்த திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தைப் புகட்ட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

T.sthivinayagam
ஆக 01, 2025 18:24

இது கலிகாலம் சொந்த அப்பாவுக்கே ஆப்பு வைக்கும் காலம்


என்றும் இந்தியன்
ஆக 01, 2025 17:47

"தமிழக காவல் துறை"யின் பெயர் இந்த 4 1/2 வருடத்தில் "திராவிட அறிவிலி மடியல் அரசின் ஏவல் துறை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது


Jack
ஆக 01, 2025 17:06

நைனா எதுக்கு குடைச்சல் கொடுக்கறாரு ?


சமீபத்திய செய்தி