உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுச்சூழலை பாதிக்கும் என்.எல்.சி.,யை உடனடியாக மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதிக்கும் என்.எல்.சி.,யை உடனடியாக மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை; என்.எல்.சி., ஆலையை மூட ஆணையிட வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி., நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.என்.எல்.சி., நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ள சூழலில், மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததது கவலையளிக்கிறது.என்.எல்.சி.,யின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று 2024ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்ததன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வானதிராயபுரம் பகுதியில் அனுமதிக்கப்பட்டதை விட 62 மடங்கும், பக்கிங்காம் கால்வாய் பகுதியில் அதிக அளவாக 115 மடங்கும் கூடுதலாக பாதரசம் இருப்பது தெரிய வந்துள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் என்.எல்.சி.,யால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அந்த ஏரியில் உள்ள நீரிலும் பாதரசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. காரணம், கடந்த 2023ம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்திருந்தது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம் தோல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதும் உறுதியாகியிருந்தது. அவை இப்போது இந்த ஆய்வின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.என்.எல்.சி., நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களால் கடலூர் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தெந்த வழிகளில் எல்லாம் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்.எல்.சி.,யால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் பா.ம.க.,வின் குற்றச்சாட்டு ஆகும்.ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி தான் அந்த ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலத்திற்கும் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய தீங்குகளை விட பல மடங்கு அதிக கெடுதலை என்.எல்.சி., ஏற்படுத்தியிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா? என்பது தான் எனது வினாவாகும்.தனியார் தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் என்.எல்.சி.,யால் பெரும் தீமைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றில் நம்பிக்கை இல்லை என்றால், சென்னை ஐ.ஐ.டி., மூலம் கூட தமிழக அரசு மீண்டும் ஒருமுறை ஆய்வு நடத்திக் கொள்ளலாம். அந்த ஆய்விலும் என்.எல்.சி.,யால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்.எல்.சி.,நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venkatesan.v
ஏப் 27, 2025 03:01

நெயவேலி, கல்பாக்கம், கூடங்குளம், மேட்டூர்... மற்றும் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் மூடிவிட்டு... குடிசைகளை கொளுத்தி மின் விநியோகம் செய்யலாம்....


Keshavan.J
ஏப் 28, 2025 11:14

மரம் வெட்டி பார்ட்டியிடம் என்ன எதிர்பார்க்கமுடியும். எல்லாம் நம் தலையெழுத்து. ஆளும் கட்சியும் சரியில்லை எதிர் கட்சியும் சரியில்லை. இரண்டு பக்கமும் படித்த மற்றும் படிக்காத பயலுக இருக்கானுங்க


Sampath Kumar
ஏப் 26, 2025 17:28

சரி மூடி விட்டு மின்சாரத்துக்கு என்னபண்ணலாம் சொல்லுங்க சார் ஒன்னு பண்ணலாம் தைல புறம் தோட்டத்தில் உள்ள மரத்தை வெட்டி கரி ஆக்கி அதை வைத்து மின்சாரம் பண்ணி விற்கலாமா ? போவியா


Murugan Guruswamy
ஏப் 26, 2025 16:06

தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம், வங்கி, ரயில்வே, உள்ள எல்லா வேலையும் வட இந்தியர்களுக்கு தான், வட இந்தியர்கள் மூளை அதிகமாக உள்ளவர்கள்.


பா மாதவன்
ஏப் 26, 2025 14:16

ஐயா, அவர் சிபாரிசு செய்த ஆட்களுக்கு அங்கே ஒன்னும் காரியம் நடக்க வில்லை போலும். அதனால்தான், அதிகாரிகள் மேல் உள்ள கோபத்தில், என்எல்சி க்கே காரியம் பண்ண வேண்டும் என்று பொங்குகிறார் . போலும். எல்லாம் அரசியல் தான்... அடுத்த வைகோ...


V K
ஏப் 26, 2025 14:02

மங்கோ மணிக்கு திடிர்னு அறிவு வந்துச்சு அது நாற்பது ஐம்பது வருஷமா இயங்குது அப்போ இல்லாத சுற்று சூழல் இப்போ வந்துடுச்சா


Murugan Guruswamy
ஏப் 26, 2025 13:50

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 15 ஆயிரம் வட இந்தியர் கள் வேலை செய்கின்றனர், ஆகையால் சுற்று சூழல் எல்லாம் பார்க்க முடியாது, வட இந்தியர்கள் அறிவாளிகள், டுமீலன்ஸ் வேஸ்ட்


Ramesh Sargam
ஏப் 26, 2025 12:02

என்.எல்.சி.,யை மூடிவிட்டால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்து அவர்கள் குடும்பம் வீதிக்கு வரும். அது பரவாயில்லையா? என்னய்யா உளறுகிறீர். நீ, உன் வாரிசுகளுக்கு தேவையானவற்றை சேர்த்துள்ளீர்கள். ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு நீ சோறுபோட்டு கவனித்துக்கொள்வாயா?


Radha Krishnan
ஏப் 26, 2025 11:41

அப்புறம் என்ன தலைவரே வீட்டில் ஏ.சி. நல்லா ஓடுதா?


மணி
ஏப் 26, 2025 11:36

ஒவ்வெண்ணுக்கும் ஒவ்வெருத்தன் கிளம்பிடு ரானுக பி றகு எப்படி ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை