உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரிவருவாயில் 50% தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

வரிவருவாயில் 50% தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை; தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 சதவீதத்தை தமிழகத்திற்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரிவருவாயை மத்திய - மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் விவாதிப்பதற்காக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16ம் நிதி ஆணையத்தின் குழு 4 நாள் பயணமாக சென்னைக்கு வந்திருக்கிறது.முதல்வர் உள்ளிட்டோருடன் நாளை இந்தக் குழு நடத்தவிருக்கும் கலந்தாய்வுகள் பயனளிக்க வேண்டும்; அதற்கான பங்களிப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் ஆகும்.நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே மத்திய அரசின் வரிப் பகிர்வில் தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை ஆகும். இந்த நிலை என்றாவது ஒரு நாள் மாற வேண்டும். ஆனால், 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு,73 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி போக்கப்படவில்லை.இந்தியா போன்ற நாடுகளில் வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு தான் நிதி வழங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வரிப்பகிர்வுக் கொள்கை வளர்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41% மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தமிழகத்திற்கு வெறும் 4.079% மட்டும் தான் கிடைக்கிறது. 9ம் நிதி ஆணையத்தின் காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி வருவாயில் 7.931% தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது. இது மிகப்பெரிய பொருளாதார அநீதி ஆகும். இந்த அநீதியை களையும்படி 16ம் நிதி ஆணையக் குழுவிடம் தமிழக அரசு உரிய காரணங்களுடன் விளக்க வேண்டும்.மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 சதவீதத்தில் காட்டில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 சதவீதத்தை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் நிதிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீர்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசும், நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நிதி ஆணையக் குழுவிடம் இதை தமிழக அரசு உறுதியாக வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MADHAVAN
நவ 18, 2024 11:46

நமது வரிப்பணத்தை நமது தமிழகத்துக்கு தராமல், உத்திரபிரதேசம் போன்ற சோம்பேறிகளுக்கு குடுப்பது பாவம், இது தெரியாமல், இங்குவந்து கருத்துபோடுவது கேவலம்,


என்றும் இந்தியன்
நவ 17, 2024 20:46

குழந்தாய் உன் வீட்டில் நீ SGST உன் அப்பா GST- உன் குடும்பத்திற்கு உன் அப்பா குடும்பத்திற்கு உன் குழந்தை குடும்பத்த்திற்கு என்னும் போது அவர்களுக்கு எவ்வளவு தேவை என்று கணக்கிடப்பட்டு அது பிரித்துக்கொடுப்படுகின்றது இது புரியாமல் நீயோ ஸ்டாலினோ உளறிக்கொண்டேயிருப்பது...


GMM
நவ 17, 2024 20:11

மரம் வெட்டி மருத்துவர் வரி வருவாயில் 100 சதவீதம் ஏன் கேட்க அச்சம்? அப்படியே தேசிய கடன் 50 சதவீதம் ஏற்க வேண்டும். இராணுவத்தில் 50 சதவீதம் பாட்டாளி போர்முனையில் இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா சாதிக்கும் சமசீர் பலன் கிடைக்கும்?


முக்கிய வீடியோ