உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் கடைகளை மூட பா.ம.க., மற்றும் த.மா.கா., வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை மூட பா.ம.க., மற்றும் த.மா.கா., வலியுறுத்தல்

சென்னை: 'காவலர் முத்துக்குமார் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள, பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர், 'தமிழகத்தில் மதுக்கடைகளை மூட, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.அன்புமணி: மதுரை மாவட்டம், முத்தையன்பட்டி அரசு மதுக்கடையில், போலீஸ்காரர் முத்துக்குமார் மது அருந்திய போது, அருகில் மது குடித்துக் கொண்டிருந்த, அடையாளம் தெரியாத சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.போதையில் இருந்த எதிர் கும்பல், முத்துக்குமாரை பின் தொடர்ந்து சென்று, அரிவாளால் வெட்டி, கல்லால் அடித்து, படுகொலை செய்துள்ளனர்.மது, கஞ்சா ஆகிய இரண்டும், சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை சான்று.தமிழகத்தில் நடக்கும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும், மது தான் காரணம் என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.எனவே, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட, சட்டம் - - ஒழுங்கை பாதுகாக்க, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜி.கே.வாசன்: உசிலம்பட்டி அருகே போலீஸ் முத்துக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாதது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.டாஸ்மாக் மற்றும் போதை பொருட்கள் பழக்கத்தால், கொலைகள் நடப்பது தமிழகத்தில் வழக்கமாகி விட்டது. எனவே, தமிழக அரசு, இனியாவது விழித்துக் கொண்டு, டாஸ்மாக்கை மூடி, சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ