உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி

பா.ம.க., போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஐகோர்ட் கேள்வி

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பா.ம.க., மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தடையை மீறி பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சவுமியா உள்பட பா.ம.க.,வினரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பா.ம.க., வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததுடன், கடுமையான கருத்துக்களையும் முன்வைத்தார். அவர் கூறியதாவது: பா.ம.க., போராட்டத்தை அனுமதிக்க உத்தரவிட முடியாது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்? வெறும் விளம்பரத்துக்காக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். சமூகத்தில் ஆண், பெண் என பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம், எனக் காட்டமாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MN JANAKIRAMAN
ஜன 02, 2025 21:12

ALL POLITICAL PARTIES SHOULD KEEP SILENCE.... SOMETHING LIKE COURT..THIS IS WHAT COURT IS DICTATING TO PARTIES????


P.Sekaran
ஜன 02, 2025 17:19

எதிர் கட்சிகள் பெண் வன்கொடுமையை அரசியலாகதான் பார்பார்கள் அவியலாகவா பார்ப்பார்கள். இது கூட நீதிமன்றத்திற்கு தெரியவில்லை. பின் ஏன் தான் அரசியலில் உள்ளார்கள். இதில் எதிர்த்து வந்தால்தான் அரசியல் பண்ணமுடியும். அப்பொழுதுதான் மக்களுடைய ஆதரவு கிடைக்கும்.


Ganesh Subbarao
ஜன 02, 2025 15:56

திமுக போட்ட பிச்சயில் நீதிபதி ஆனவரா இருக்கும் போராட்டம் என்பது ஜன நாயகத்தின் முதுகெலும்பு.


என்றும் இந்தியன்
ஜன 02, 2025 15:55

அவியல் துவையல் மசியல் தெரிந்த திருட்டு திராவிட அடிமை அநீதிமன்றமே உன் செயல் இப்படியே தொடர்க. கலி காலம் என்றால் நீதிமன்றங்கள் அநீதிமன்றங்கள் ஆகிவிடும் காவல் துறை ஏவல் துறை ஆகிவிடும் அரசியல் வாதி அரசியல் வியாதி ஆகிவிடுவான் ஜனசேவை பணசேவை ஆகிவிடும் சட்டமன்றம் திட்டும் மன்றம் ஆகிவிடும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 14:11

வன்கொடுமை விவகாரத்தை ஏன் அரசியலாக்குறீங்க ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 15:32

இப்படியா போட்டேன் ?


Ganapathy
ஜன 02, 2025 13:17

பின்ன என்ன அவுக உன்னோட கோர்டுக்கு வந்து அவியலா செய்வாங்க?


சம்பா
ஜன 02, 2025 12:22

ஓய்வுக்கு பிறகு கவனிக்க படுவீர் அவியல் சொன்னது யார்னு உனக்கு தெரியாத


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை