உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., பெண் நிர்வாகி கைது..

பா.ம.க., பெண் நிர்வாகி கைது..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பா.ம.க., மத்திய மாவட்டம் சார்பில் கடந்த 26ல் தமிழக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், 'பா.ம.க., நிறுவனர் ராமதாசை யார் தரக்குறைவாக பேசினாலும் வெட்டுவேன்' என, பேசிய கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் ராதாமணி மீது, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் கோவிந்த,ன் கிருஷ்ணகிரி போலீசில் புகாரளித்தார்.அதன்படி, பொது ஊழியரை அவமரியாதையாக பேசுதல், பணியை செய்ய விடாமல் தடுத்தல், மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராதாமணியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

CHELLAKRISHNAN S
நவ 30, 2024 11:51

not only isaivani but also Senthil balajis brother


Raj
நவ 30, 2024 07:18

என்ன விரைவாக கைது செய்தார்கள், ஆனால் இசைவாணியை இன்னும் தேடி வருகிறார்கள்......


சமீபத்திய செய்தி