உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., எம்.எல்.ஏ., அருளின் மாவட்ட செயலர் பதவி பறிப்பு 

பா.ம.க., எம்.எல்.ஏ., அருளின் மாவட்ட செயலர் பதவி பறிப்பு 

சென்னை:சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க., செயலர் பொறுப்பிலிருந்து, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருளை நீக்கிவிட்டு, சரவணன் என்பவரை, அக்கட்சி தலைவர் அன்புமணி நியமித்துள்ளார்.பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதலைத் தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்களை, ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை, அன்புமணி நீக்குவதும் தொடர்கிறது. ராமதாசின் தீவிர ஆதரவாளரான, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க., செயலராக உள்ளார். சமீபத்தில் அன்புமணி நடத்திய, சேலம் மாவட்ட பொதுக்குழுவில், அவர் பங்கேற்கவில்லை. தைலாபுரத்தில் நேற்று ராமதாஸ் நடத்திய, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, பா.ம.க.,வின் இணைப் பொதுச்செயலராக அருள் செயல்படுவார் என, ராமதாஸ் அறிவித்தார்.இந்நிலையில் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், சேலம் மாநகர் மாவட்டச் செயலராக சரவணன் நியமிக்கப்படுதாக அறிவித்துள்ளார். இதன் வாயிலாக, அருளின் மாவட்டச் செயலர் பதவியை பறித்துள்ளார். ராமதாஸ் -- அன்புமணி மோதல், பா.ம.க.,வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை