உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடிதம் எழுதி கடமையை முடிக்கும் முதல்வர்; ராமதாஸ் சுரீர்

கடிதம் எழுதி கடமையை முடிக்கும் முதல்வர்; ராமதாஸ் சுரீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதல்வர் ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்; வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மீன்பிடி படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம்தான் கைது செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் மேலும் 12 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது இந்தியாவை சீண்டும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.இந்திய இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.இந்த சிக்கலுக்கு எப்போது தீர்வு காணப்படுமோ, அப்போது தான் மீனவர்கள் நிம்மதியாக வாழ முடியும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றும் கூட கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், மீனவர்களின் உணர்வுகளை மதித்து சிக்கலுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கைகளையும் அரசுகள் எடுக்கவில்லை. ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதல்வர் ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார்.தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்த மாதம் 29ம் தேதி மீனவர் பிரச்சினைக்கான இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது.அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசு மாநில அரசு வலியுறுத்தவேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

udayanan
நவ 12, 2024 20:00

பணம் வேண்டாம்... உங்களால கூட வர முடியுமா?


ramesh
நவ 12, 2024 19:45

மத்திய அரசு தான் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் கைதுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் படகை மீட்கவேண்டும் . இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க பேச்சு வார்த்தை மற்றும் அதை மீறினால் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டும்


அப்பாவி
நவ 12, 2024 18:20

இலங்கைக்கு போய்ட்டு வர கைச்செலவுக்கு பணம் தர்ரோம். போய் மீட்டுக்கிட்டு வர முடியுமா? துணைக்கு பையனையும் அழைச்சுக்கிட்டுப் போங்க.


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 19:28

சிறப்பு, சிறப்பு. இந்த மாங்கா அறிக்கை மனுஷனுக்கு சரியான கேள்வி. பாராட்டுக்கள்.


சாண்டில்யன்
நவ 12, 2024 17:11

கடிதத்தின்மீது கடமையை செய்ய சொல்ல பயந்தாள் எப்படி ஒங்கமேல மிகுந்த மரியாதை உள்ளதே நீங்க சொன்னா கேப்பாங்க ஒருபோனபோடுங்க


Barakat Ali
நவ 12, 2024 16:34

சிங்கப்பூர்ல போதை மருந்து கடத்தி தூக்குல தொங்குனா அவனை தமிழன் ன்னு போடாம இந்தியருக்கு தூக்கு ன்னு போடுறாங்க ..... ஆனா தமிழக மீனவனை இலங்கை கைது பண்ணுனா அதுனால இந்திய இறையாண்மை டேமேஜ் ஆவுமாம் ... கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறாங்க பாருங்க ....


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 16:23

அயல் நாட்டின் எல்லைக்குள் போவதும் அவர்கள் எல்லை மீறுபவர்களைக் கைது பண்ணினாலும் அவர்களோடு பேசி தீர்வு காண்பதும் ஒன்றிய அரசின் கடமை. இது தெரியாமல் உளறிண்டிருக்கார்.


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 16:20

இவரு இன்னொரு சீமான். இன்னும் கூட்டணி டீல் ஆரம்பிக்கவில்லை.


udayanan
நவ 12, 2024 20:02

நீங்கதான் அரசியல் பார்க்கர்?


அரசு
நவ 12, 2024 15:16

இவர் தினமும் ஒரு வெற்று அறிக்கை வெளியிட்டு காலம் கடத்தும் பெட்டிக் கட்சியின் தலைவர்.


Ms Mahadevan Mahadevan
நவ 12, 2024 13:55

இதில் எல்லா கட்சிகளும் பொய் சொள்ளுகின்தோ என்று சந்தேகம் வருகிறது. இந்திராகாந்தி இலங்கை உடன் நட்புறவு வருங்காலத்தில் இந்தியா வின் பாதுகாப்பிற்கு தேவை என்ற தொலைநோக்கு பார்வையில் ஒப்பந்தம் போட்டார். ஆனால் இலங்கை அரசு கள் நம்மை ஏமாற்றி வருகின்றன. ஜெயவர்த்தனே ஆரம்பித்து வைத்தார். அதனால் இ ல ங்கையும் பயன் பெறவில்லை. மோடி ஒன்று செய்யலாம் புதிதாக ஒரு ஒப்பந்தம் இரு நாட்டுக்கும் பயன் பெறும் விதத்தில் அது இருக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி