உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகைக்கடன் பெறவே முடியாது என்ற சூழலை உருவாக்கும் இந்த புதிய விதிமுறைகள் கண்டிக்கத்தக்கவை.ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, நகைகளை அடகு வைக்கும் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கப்படும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான சான்றை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும், அனைத்து வகையான தங்கத்திற்கும் நகைக்கடன் வழங்கப்படாது, குறிப்பிட்ட தன்மை கொண்ட தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்பதும் தான். இந்த இரு விதிகளும் நகைக்கடன் பெறுவதற்கு பெரும் தடையை ஏற்படுத்தக்கூடும்.நகைகளை அடகு வைப்பவர்கள், அதன் உரிமைக்கான சான்றுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவை, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பொறுத்தவரை நகைகள் எனப்படுபவை குடும்பச் சொத்துகளாகவே கருதப்பட்டு வருகின்றன.பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகள் கூட தலைமுறைகளைக் கடந்து இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. அத்தகைய நகைகளுக்கு அவை வாங்கப்பட்டதற்கான ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிப்பது நியாயமல்ல.நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்கு இணையான வேறு ஆவணங்களையோ அல்லது உறுதிமொழிச் சான்றையோ அளித்து கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனாலும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக்கூடாது என்று கூறப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி நகைக்கடன் மறுக்கப்படக்கூடும்.அதேபோல், ரிசர்வ் வங்கியின் நான்காவது விதியின்படி வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். இதனால் வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்களால் நகைக்கடன் பெற முடியாது.தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். ஏற்கனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதை நீட்டித்துக் கொள்ள முடியாது; அடகு வைத்த நகையை மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் கடன் பெற முடியும் என்ற நிபந்தனையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிய வரைவு விதிகள் நகைக்கடன் பெறுவதை மிகவும் சிக்கலாக்கி விடும். வங்கிகளுக்கு பதிலாக தனியார் நகை அடகுக் கடைகளையும், கந்து வட்டிக்காரர்களையும் அணுக வேண்டிய நிலை ஏற்படும்.எனவே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளில் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் அல்லது நகைக்கடன் வழங்குவதற்கான இப்போதைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mariadoss E
மே 28, 2025 16:54

முதல் முறையா தலைவர் ஒரு உருப்படியான, வரவேற்கத்தக்க நல்ல கருத்து சொல்லி இருக்கிறார்.


தாமரை மலர்கிறது
மே 21, 2025 21:15

நானும் ரவுடியாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள, மாங்கா தாஸ் எதையாவது குறை சொல்கிறார் .


NAGARAJAN ARUMUGAM
மே 21, 2025 18:40

மிகவும் சரியான கருத்து


உண்மை கசக்கும்
மே 21, 2025 17:26

நகைக்கடை முதலாளிகள் கொடுக்கும் கோடிகளுக்காக இவர் கூப்பாடு போடுகிறார். எந்த நகை கடை ஒழுங்காக ரசீது கொடுக்கிறார்கள் என்று சொல்லுங்கள். எல்லாம் ஏமாத்துகாரனுங்க.


Lokesh Babu
மே 21, 2025 16:19

muttal thanamana sattam yaareai thirupthi padutha entha mathriyana sattatha kondu varanaga makkalaghiya naam kadumaiyaga eathai aethirkka veandum


Dinesh Kumar
மே 21, 2025 15:58

உங்கள் கருத்து பொதுவான கருத்து. அதிக மிடில் கிளாஸ் மக்கள் இந்த நகை கடனை மட்டும் பயன்படுத்தி குடும்பம் நடத்துகிறார்கள் . அவர்களிடம் அவர்கள் அம்மா நகை மற்டும் பரம்பராய் நகை மட்டுமெ அதிகமக பயணிக்கும் .


A Venkatachalam
மே 21, 2025 15:31

தமிழ் நாட்டில் ஏழை மக்களின் காவலராக வளம் வந்து கொண்டிருக்கும் தலைவர் வாழ்க.


SIVA
மே 21, 2025 15:05

வங்கியில் வேலை செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 4% வட்டியில் வங்கி கடன் கிடைப்பதாக ஒரு தகவல் , இவர்களுக்கு எப்படி மக்களின் கடன் கஷ்டம் தெரியும் , அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 10% வட்டியில் பர்சனல் லோன் கிடைக்கின்றது , தங்க நகை கடன் விஷயத்தில் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் பத்து முறை யோசித்து செய்யவும் ....


jagadesh
மே 21, 2025 15:04

என்னுடைய பழைய நகைகளை வைத்துதான் எனது குழந்தைகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்புக்கு Fees கட்டிவருகிறேன், எனது தாய்வழி பழைய தங்க நகைகளுக்கு ரசீது கேட்டால் எங்கே போவது? அரசாங்க மறுக்குமேயானால் பழையபடி குஜராத்,ராஜஸ்தான் சேட்டு கிட்டத்தான் போகவேண்டிவரும். அவர்கள் கொழுப்பார்கள், மேலும் பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கியவர்களை விட்டுவிடுவார்கள் அல்லது கொழுத்த முதலாளிகளின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்கள் ஆனால் நகை ஈட்டுக்கு பணம் கொடுப்பதில் என்னைப்போல் ஏழைகளை வஞ்சிப்பார்கள் இங்குதான் மோடி அரசாங்கம் தோற்றுவிடுகிறது.


ஆரூர் ரங்
மே 21, 2025 15:52

நகை வாங்கிய பில் இல்லாதபட்சத்தில் தன்னுடையதுதான் என அபிடவிட் கொடுக்கலாம் என்பது விதி. வருமானவரி கட்டாமல் ஏய்க்க பில் இல்லாமல் தங்கத்தை வாங்கி முதலீடு செய்கிறார்கள். அது பெரும்பாலும் கடத்தல் ஹவாலா தங்கம்தான். அதேபோல தங்க நகைகளை 500 கிராமுக்கு அதிகமாக வாங்கி வைத்திருந்தால் வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டும். சோதனைக்கு வந்தால் பில்/கணக்குக் காட்ட வேண்டும். அவற்றை விற்றால் கிடைக்கும் லாபத்திற்கு வரி கேபிடல் கெயின் வரி கட்ட வேண்டும். பெரும்பாலானவர்கள் இதனை கணக்கில் காட்டுவதில்லை. இது போன்ற குற்றங்களை தடுக்க புதிய உத்திகள் தேவைப்படுகின்றன.


Anantharaman Srinivasan
மே 21, 2025 14:59

திருட்டு நகைகளை அடமானம் வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் தான் RBI விதிகளைப்பார்த்து கவலை பட வேண்டும். பழைய குடும்ப நகைகளை அடமானம் வைக்கவும் ரிசர்வ் வங்கி விதிகளில் வழியுள்ளது. வேறு எந்த கட்சி தலைவரும் கவலைபடலே. ராம்தாஸ்க்கு ஏன் வேண்டாத கவலை


புதிய வீடியோ