உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்

பா.ம.க., நிர்வாகி கொலை : 2 பேர் கோர்ட்டில் சரண்

தூத்துக்குடி: மதுரை பா.ம.க., நிர்வாகி படுகொலை தொடர்பாக, இருவர் திருச்செந்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மதுரை பை-பாஸ் ரோடு, வேல்முருகன் நகரில் வசித்தவர் இளஞ்செழியன்,42. பா.ம.க., நிர்வாகியான இவர், 26ம் தேதி காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக , மதுரை அவனியாபுரம் காசிராஜன்,34, பாலா,29, ஆகிய இருவர் திருச்செந்தூர் ஜே.எம்., கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதி பரித்தா உத்தரவுப்படி இவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !