உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்சோ குற்றங்கள்

போக்சோ குற்றங்கள்

'விஷம' தொழிலாளிக்கு 'காப்பு'

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சிவகிரி கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 55; கூலி தொழிலாளி. மனைவி இறந்து விட்டார். இவர், அப்பகுதியை சேர்ந்த, ஆறு வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு செய்தார். தகவலில், அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டனர். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, சிவகிரி போலீசார், பெரியசாமியை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் விறகு வெட்டும் தொழிலாளி பிரகாஷ், 24. இவருக்கு திருமணமாகி மனைவி மகன், மகள் உள்ளனர். பிரகாஷ், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகினார், இதில் சிறுமி, மூன்று மாத கர்ப்பமானார். புகாரின்படி, வந்தவாசி மகளிர் போலீசார், பிரகாஷை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

'சில்மிஷ' இளைஞருக்கு 'கம்பி'

தஞ்சாவூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்தவர் பிரதீப் கண்ணன், 24; கூலி தொழிலாளி. இவர், தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில், கோவில் விழாவுக்காக, தன் உறவினர் வீட்டிற்கு வந்து இருந்தார். அதே ஊருக்கு, தன் பாட்டி வீட்டிற்கு, 16 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். சிறுமியிடம் பழகிய பிரதீப்கண்ணன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின்படி, வல்லம் மகளிர் போலீசார், போக்சோவில் பிரதீப் கண்ணனை கைது செய்தனர்.

'காமுக' இளைஞருக்கு சிறை

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை சேர்ந்த தொழிலாளி ஒருவர், மனைவியை பிரசவத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். மனைவிக்கு துணையாக தன் தம்பி மனைவியையும், அவரது ஆறு வயது மகளையும் அழைத்து வந்துள்ளார். தொழிலாளியும், அவரது தம்பியின் ஆறு வயது மகளும், நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு கூடத்தில் இரவு துாங்கியபோது, சிறுமிக்கு, திருவாரூர் மாவட்டம், புங்கன்சேரியை சேர்ந்த கொத்தனார் தினேஷ், 32, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். திருவாரூர் கிழக்கு போலீசார், போக்சோவில் தினேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ