உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு; பெற்றோர் உட்பட மாணவியர் 8 பேர் பாதிப்பு

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு; பெற்றோர் உட்பட மாணவியர் 8 பேர் பாதிப்பு

சென்னை: இரண்டு வார விடுமுறைக்கு பிறகு இன்று (நவ.,04) திறக்கப்பட்ட திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டது; பெற்றோர் உட்பட மாணவியர் 8 பேர் மயக்கம் அடைந்தனர். பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ikmumoor&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த அக்.,25ம் தேதி, திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டதால், பள்ளியில் இருந்த 45 மாணவியர் பாதிக்கப்பட்டனர். இதனால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு, திருவொற்றியூரில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாசு கட்டுபாட்டு வாரியம், பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது. தீபாவளி பண்டிகை, சனி, ஞாயிறு உள்ளிட்ட தொடர் விடுமுறைக்கு பின், இன்று(நவ.,04) மீண்டும் திறக்கப்பட்டது. பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இன்று மீண்டும் திடீரென வாயு கசிவு காரணமாக, பெற்றோர் உட்பட மாணவியர் 8 பேர் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார், தீயணைக்கும் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.வாயுக் கசிவால் மீண்டும் மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raa
நவ 04, 2024 17:40

இந்த பள்ளிக்கல்வித்துறை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். முதல் தடவை வாங்கியது பத்தவில்லை என்றால்...


என்றும் இந்தியன்
நவ 04, 2024 17:38

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு. விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளியின் பெயரை விக்டோரியா அல்லது மேரி மெட்ரிகுலேஷன் என்று மாற்றினால் கிறித்துவ பிச்சை திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசு உடனே தகுந்த நடவடிக்கை எடுக்கும்


S Regurathi Pandian
நவ 04, 2024 16:11

அனைத்து கட்சிகளும் வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர்


முருகன்
நவ 04, 2024 15:26

இதுவே இன்றைய பள்ளிகளின் நிலை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறுவாதல் இது நடக்கிறது


Jysenn
நவ 04, 2024 13:19

பேட்டை ரவுடி ஏரியாலே இப்படியா?


Svs Yaadum oore
நவ 04, 2024 13:17

மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டதாம் மாணவியர் 3 பேர் மயக்கம் அடைந்தனராம் ..... மாசு கட்டுபாட்டு வாரியம், பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறதாம் ....இது என்னய்யா ஆட்சி நடக்குது இங்கே ....படு கேவலமான ஆட்சி நடக்குது .....பள்ளியின் பெயரில் சங்கர அல்லது விவேகானந்தா என்று இருந்தால் மட்டும்தான் உடனே விடியல் அரசு சமூக நீதி மத சார்பின்மையாக விசாரணை கைது என்று நடவடிக்கை எடுக்குமா ??....


Ramesh Sargam
நவ 04, 2024 12:30

முதலமைச்சர், துணை முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஏன் சென்று பார்க்கவில்லை? ஏன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஏன் என்றால், இதுவரை ஒரு உயிர்பலியும் இல்லை. ஏதாவது ஒரு சிலர் மாணவியர்கள் இறந்திருந்தால், உடனே தங்களது பரிவாரங்களுடன் சென்று, ஒரு போட்டோசூட் நடத்தி, நிவாரணம் அறிவித்துவிட்டு களைந்து சென்றிருப்பார்கள். அப்பவும் மேல்கொண்டு வாயு கசிவு ஏற்படாமல் இருக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டார்கள். கேடுகெட்ட திமுக அரசு. வெட்கம். வேதனை.


Svs Yaadum oore
நவ 04, 2024 13:19

பள்ளியின் பெயரை பார்த்து விட்டு சமூக நீதி மத சார்பின்மையாக நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டார்களாம் ....


Rajamani Krishnamurthi
நவ 04, 2024 13:32

ask to check septic tank and where the gas out let osgoing


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை