உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்எல்ஏ விடுதியில் சோதனை: அமலாக்கத்துறை மீது போலீசில் புகார்

எம்எல்ஏ விடுதியில் சோதனை: அமலாக்கத்துறை மீது போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரிய சாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக, சட்டசபை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !