வாசகர்கள் கருத்துகள் ( 21 )
உயர் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ள காவல் துறை பணியாளர்களுக்கு புத்தி சொல்ல துப்பில்லையா. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை இறக்கும் வரை அடித்து துன்புறுத்துவது என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஏற்று கொள்ள கூடியதா. சரி உயர் அதிகாரிகளே சொல்லி விட்டார்கள் அடித்து உண்மையை கொண்டு வாருங்கள் என்று. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் மனசாட்சி இல்லையா. உண்மையை வரவழைக்க பல வழிகள் உள்ளது. சட்டத்தில் சொல்ல பட்ட வழிகளில் ஏன் முயலவில்லை. அடித்தவருக்கும் அடி வாங்கி இறந்தவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. யாரோ, யாருக்காகவோ, யாரை திருப்தி படுத்தவோ செய்யும் செயல் ஒரு வாழ வேண்டிய இளைஞரை சாகடித்து விட்டீர்கள். அரசு உயர் அதிகாரிகள் முதல் முதல்வர் வரை அனைவருக்கும் கெட்ட பெயர் சேர்த்து விட்டார்கள். மேலும் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்கள்.
முன் எப்போதோ பீகார் இந்த மாதிரி இருந்த போது அம்மாநிலத்தை வேறு மாநி லத்தவர் ஆள வேண்டும் என்று குரல் எழுந்தது நினைவுக்கு வருகிறது. இப்பொழுது கவர்னர் அதிகாரத்தை காட்டலாம்
தகுதி, திறமை இரண்டும் என்று தேவையின்றி போனதோ, அன்றே அணைந்து தொலைந்தது. நன்கு படித்த மாணவர்கள் ஐஐடி, மருத்துவம், என்ஜினீரிங், சயின்ஸ், காமர்ஸ், சிஎ போன்ற படிப்புகளுக்கு தங்களது தகுதிக்கு ஏற்ப போய்விடுகின்றனர். மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்று, ஏனோதானோ என்று திணறும் மாணவர்கள் சட்டம் படித்து, அரசியலுக்கு போகின்றனர். அதிலும் தேறாமல் பள்ளியுடன் படிப்பை நிறுத்தியவர்கள் காவல்துறையில் சேர்கின்றனர். போதாதற்கு அந்த இளைஞர்களை தவறாக பயன்படுத்தும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த காவல் இளைஞர்கள் வேளையில் சேர்ந்த நாள் முதல் ரவுடிகள், பொறுக்கிகளுடனேயே தினமும் வழங்குகின்றனர். அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் கலெக்ஷன், கமிஷன், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, ஊழல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
மன்னவரு காலத்தில் மு க சொல்லுவார்: தமிழக காவல் துறையின் ஈரல் கெட்டது. ஈரல் மட்டுமல்ல எல்லாமே கெட்டுள்ளன. காவல் துறையின் தலை முதல் கால்கள வரை எல்லோரையும் வீட்ணிற்கு அனுப்பிப் புதியவர்களைச் சேர்க்கவேண்டும்
பல உண்மைகள் வெளிவர காரணமாக இருந்த அஜித் குமாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். போலீஸ் துறையை கெடுத்தது கருணாநிதி. குடும்ப ரத்தம் முதல்வரின் அலட்சியத்தில் தெரிந்தது. இனி யாரையும் கஸ்டடி யில் அளவுக்கதிகமாக துன்புறுத்த மாட்டோம் என்று போலீசார் உறுதி பூண வேண்டும்
பல துறைகளில் இருப்பது போல் காவல் துறைக்கும் ஒரு ombudsman வேண்டும், அல்லது விசாரணை கைதிகள் முழு நேரமும் cctv கண்காணிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.
உடல் ஆரோக்கியத்துடன் இருந்த 29 வயது வாலிபர் சாகும்வரை துன்புறுத்துதல் என்பது மனிதாபிமானம் உள்ளவர் எவரும் எந்த பதவியில் இருந்தாலும் செய்யக்கூடியதா? நகையை பறிகொடுத்ததாக கூறுபவர்களிடமிருந்து புகார் பெறப்பட்டதா? சாதாரண பொதுஜனம் இதுபோல புகாரளிக்கச்சென்றால் அந்தப்பொருள் வாங்கியதற்கு ஆதாரமாக அதற்குரிய பில்லை கேட்கின்றார்கள்? பல நேரங்களில் அந்தப்பொருள் தொலைத்ததாக பொய் புகார் கொடுப்பதாக புகார்தாரரையே திருப்புகிறார்கள். போலீஸ் நன்கு விசாரித்ததில் அந்த இளைங்கர் இறந்துவிட்டார். சரி தற்பொழு தொலைந்துபோன நகையை கண்டுபிடித்தாகிவிட்டதா? மேலதிகாரி சொன்னார் என்பதற்க்காக புகார்ன் உண்மைத்தன்மை என்னவென்று முதலில் விசாரிக்கவேண்டாமா? தற்பொழுது மேலதிகாரி சொன்னார் என கூறும் காவலரின் குடும்பங்கள் அந்த மேலதிகாரி குற்றம்சாட்டப்பட்டவர் இறக்கும்வரை தாக்கசொன்னாரா?
என்னை பொறுத்த வரை இந்த வழக்கில் போலீஸ் உயரதிகாரிகளும், Police cons ம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
உயர் அதிகாரிக்கும்... மேலே அழுத்தம் கொடுத்து நபர் யார். உண்மையில் நகை காணுமா இல்லை.... வாய் தகராறில் பொய் வழக்கா
அப்போ போலீஸ் வேலையில் மரியாதை, சம்பளம், கிம்பளம் வரும்போது மட்டும் இனிக்குதோ? இங்கே திறமை இல்லாதவர்களும், கையாலாகாதவர்களும் காவல் பணியில் குறுக்கு வழியில் சேர்ந்து விடுகிறார்கள். அதுதான் பிரச்னை. அவர்களுக்கு குற்றத்தை நிரூபிக்கும் திறமை இல்லை. தங்கள் இயலாமையை மறைக்க, கண் மூடித்தனமாக இயங்குகிறார்கள். மக்களை துன்புறுத்தி கொள்கிறார்கள். ஆள்வோருக்கு ஸலாம் போடுகிறார்கள். அவர்களை கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் ஆடுகிறார்கள். இன்னொரு முக்கியமான கேள்வி ஒரு பெரிய இடத்தில இதுபோல் செயல்படுவார்களா? இந்த ஐந்து பேரும் சாகடிக்கப்பட வேண்டும் அப்போதுதான் அந்த இளைஞரின் ஆன்மா சாந்தியடையும்.
மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025