உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி நடந்தால் போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர்

கள்ளச்சாராய பலி நடந்தால் போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ‛‛கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட போலீஸ் அதிகாரியும், எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேசன் அதிகாரியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன். '' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

நடவடிக்கை

காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் தோல்வியை மறைக்க கள்ளக்குறிச்சி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9r9nly2p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ளோம். இந்த விவகாரம் குறித்து முழுமையான தகவலை சட்டசபையில் தெரிவித்து உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மறைக்கவில்லை

கள்ளச்சாராயம் குறித்து ஒரு நபர் கமிஷன் விசாரித்து வருகிறது. அமைச்சர்கள், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்கு பின்பாகவும் நடவடிக்கை சரியில்லை என்று சொல்வது அவர்களது திசைதிருப்பும் நாடகம். கள்ளச்சாராய வழக்கு விசாரணையில் எதை மறைத்தோம் சிபிஐ விசாரணை கோருவதற்கு. தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட போலீஸ் அதிகாரியும், எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேசன் அதிகாரியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்

உறுதி

சாத்தான்குளம் மரண சம்பவத்தை அதிமுக அரசு மறைக்க நினைத்ததால் சிபிஐ விசாரணை கேட்டோம். கள்ளச்சாராய விற்பனை என்பது சமூக குற்றம். முற்றிலும் ஒழிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. கள்ளச்சாராய மரணங்களை திமுக அரசு மூடி மறைக்கவில்லை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இண்டர்போல் உதவி

கோடநாடு வழக்கில் 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது 9 மொபைல்போன், 4 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு அழைப்புகள் வந்தள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இண்டர்போல் உதவியுடன் வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

வருத்தம்

ஒரு புறம் தேர்தல் தோல்வி, சொந்த கட்சி நெருக்கடியில் சிக்கி அதிமுக தவிக்கிறது. தோல்வி, நெருக்கடியை மறைக்க அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.,வின் நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். எங்களின் பதிலை கேட்க அதிமுக தயாராக இல்லை. எங்களின் இலக்கில் நாங்கள் வென்று கொண்டே இருப்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 67 )

Venkataraman
ஜூலை 02, 2024 20:20

கள்ளசாராயத்துக்கு அந்த இடத்தில் உள்ள திமுக வட்ட செயலாளரும், சட்டசபை உறுப்பினரும், காவல் துறையினரும்தான் பொறுப்பேற்க வேண்டும். அங்கே கிடைக்கும் வருமானத்தை அந்த மூவரும்தான் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.


S Ramkumar
ஜூலை 02, 2024 14:06

உத்தரவு போடாதீங்க முதல்வரே. போலீஸ் காரர் நடவடிக்கை எடுத்தால் உங்கள் உடன் பிறப்புக்கள் என்ன செய்யும்ம்னு தெரியாதா.


Saketh
ஜூலை 02, 2024 14:05

பார்த்து சாகாமல் கள்ளச்சாராயம் குடியுங்கள் என்கிறாரா?


S. Narayanan
ஜூலை 02, 2024 12:11

கள்ள சாராயம் சாவு போன்றவற்றுக்கு எல்லாம் முதல்வர் பொறுப்பு ஏற்க முடியாது வேறு ஏதாவது திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமானால் அவரை கூப்பிடுங்கள். சரியா


Karuthu kirukkan
ஜூலை 02, 2024 05:58

கள்ள சாராய இறப்பில் -அந்த மாவட்ட போலீஸ் அதிகாரியும், எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேசன் அதிகாரியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்-காவல் துறை - அமைச்சர் யாரு ராசா , செல்லாது செல்லாது


கிருஷ்ணன் (எ) ரவி
ஜூலை 01, 2024 13:56

பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.


தேனி சிவா
ஜூலை 01, 2024 13:53

முதல்ல சரியா எழுதி வாங்கி படிக்கணும்


Praveen
ஜூன் 30, 2024 12:35

போலீஸ்க்கு சூடு சொரணை இருந்தால் இப்போவாலாவது மூளையாக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மந்திரிகலேயும் கைது செய்


Nithyanandakumar
ஜூன் 30, 2024 06:36

காவல் துறை உங்கள் கட்டுபாட்டில் தானே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் அரசியல்வாதிகள் அவர்களை நடவடிக்கை எடுக்க விடுவதில்லை. மேல் மட்ட அரசியலில் ஊழலை ஒழித்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.


Natarajan Ramanathan
ஜூன் 30, 2024 01:39

கள்ள சாராய மந்திரி தவிர மற்ற அனைவரும் பொறுப்புதான்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ