உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு:

மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது ஆண் நண்பர், கோவை ஒண்டிபுதுாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர்; மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3s4up9qd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கண்ணாடி உடைப்பு

நேற்று முன்தினம் (நவ.,02) இரவு 11:00 மணிக்கு இருவரும் காரில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்று, அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு போதையில் வந்த மூவர், கார் கதவை தட்டி, இருவரையும் வெளியே வருமாறு அழைத்தனர். அச்சமடைந்த இருவரும், வெளியே வர மறுத்தனர். இதையடுத்து, மூவரில் ஒருவர் காரின் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் அடித்து உடைத்தனர்.தொடர்ந்து, காரின் கதவு கண்ணாடியை உடைத்தனர். பின், காரில் இருந்த இளைஞரை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினர். அதில், அவருக்கு தலை மற்றும் காதின் அருகே காயம் ஏற்பட்டதை அடுத்து, மயங்கி விழுந்தார்.இதையடுத்து, மூன்று மர்ம நபர்களும் மாணவியை ஒன்றரை கி.மீ., துாரம் இழுத்துச் சென்று, மறைவான இடத்தில் வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அடுத்தடுத்து மூவரும் பலாத்காரம் செய்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் மாணவி மயங்கினார். நள்ளிரவில் அவரை அப்படியே விட்டு, மூவரும் அங்கிருந்து தப்பினர்.

நினைவு திரும்பியது

மயக்கமடைந்த வாலிபருக்கு அதிகாலை 3:00 மணிக்கு நினைவு திரும்பியது. அவர், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த விபரத்தை தெரிவித்தார். உடனடியாக பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.வாலிபர் அளித்த தகவலில், மாணவியை அப்பகுதி முழுதும் போலீசார் தேடினர். இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கார் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால், மாணவி ஆடையின்றி மயங்கிய நிலையில் கிடந்தார்.

தனிப்படைகள் அமைப்பு

அவரை மீட்ட போலீசார், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வந்தனர்.இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, கோவை மாநகர போலீஸ் வடக்கு துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

நள்ளிரவில் மாணவியின் கதறல்

காரில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டியதால் அவர் மயக்கமடைந்தார். அதன்பின் மாணவியை மர்ம நபர்கள் இழுத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என, கதறி சத்தமிட்டுள்ளார்.மாணவியின் கதறல், அருகில் உள்ள சிலருக்கு கேட்டுள்ளது; அவர்கள் சென்று பார்த்த போது, இருட்டில் அங்கு யாரும் இல்லை. அதற்குள் மூவரும் மாணவியை மறைவான இடத்துக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு

இந்நிலையில் கோவை போலீசார் குற்றவாளிகளை தேடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி(28), சதீஷ் (எ)கருப்பசாமி(29), கார்த்திக் (எ) காளீஸ்வரன்(27) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. அதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும்,இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு,வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை

கோவை வெள்ளகிணறு துடியலூர் ரோட்டில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 201 )

PERIYASAMY MANIMARAN
நவ 10, 2025 22:38

உண்மை . பெண்களே உஷார்


Padmasridharan
நவ 05, 2025 15:42

போதை ஆசாமிகளிடமிருந்தும் ஆண் நண்பர்களுடன் இருக்கும் பெண்களிடமும் பல காவலர்களும் அநாகரிகமாக பேசி மொபைல் / பணம் பிடுங்கும் அதிகார பிச்சைக்காரர்களால்தான் இம்மாதிரி துன்புறுத்தல்கள் பெருக்கியுள்ளன.


Krishna
நவ 05, 2025 06:09

Encounter All EncounterPolice Who dont Arrest RealAccused for Punishing by FastTrackCourts. Hope ScapeGoats Not Caught-Shot for MediaPublicity. Also ArrestDefamePunish All SexHungry RomeoJuliets Indecently MisBe /Public Nuisance in AllPublicPlaces.


A sagayanathan
நவ 05, 2025 06:05

தமிழகத்தில் ரவுடிகள் ஆயுதங்களை கையில் எடுக்கும் தைரியம் ஒரு பெண்ணை கற்பழிக்க எங்கிருந்து துணி அவர்களுக்கு வந்தது இது யார் கொடுத்த இடம் காவல்துறை கடுமையாக நடந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு அந்த தைரியம் வந்திருக்குமா நீதித்துறை கடுமையான தண்டனை வழங்கியிருந்தால் அவர்களுக்கு அந்த தைரியம் வந்திருக்குமா இவர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் சாக வேண்டும் இவர்களுக்கு எந்த மருத்துவ வசதியோ செய்யக்கூடாது இரண்டு மூன்று நாட்களுக்குள் பொதுமக்கள் முன்னிலையில் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு உணவளித்து காப்பாற்றக் கூடாது ஆதலால் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தூக்கு தண்டனை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்


T.sthivinayagam
நவ 05, 2025 04:28

குற்றவாளிகளை சுட்டு பிடித்து மட்டும் போதாது, மக்கள் இறப்பு மற்றும் பெண்கள் பலாத்காரத்தை வைத்து இரவு பகல் என்று பாராமல் சுயநல அரசியலுக்காக கத்தும் தவளைகள் வாயையும் சுட வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Mani . V
நவ 05, 2025 03:52

கரூருக்கு உடனடியாக விரைந்த அப்பா, துணை அப்பா, ஐந்து கட்சி அமாவாசை, ஆஸ்கர் நாயகன் அன்பில் ஏன் இங்கு செல்லவில்லை? எது இது விஜய் சம்பந்தப்பட்டது இல்லையா?


Agni Kunju
நவ 05, 2025 03:45

மதிப்பு அதிகமுள்ளது களவு போகத்தான் செய்யும். மதிக்காமல் கண்ட காணாத இடத்தில் வைத்தால் கண்டவர்களுக்கும் கைப்பற்றத்தன் தோன்றும். நம் பாதுகாப்பை நாம் தான் முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான இம்மாதிரியான குற்றங்களில் மான் தான் மிருகங்கள் வாழும் இடங்களுக்கு சென்று மாட்டிக்கொண்டு இரையாகிறது. பாலுணர்வு இயற்கை தனிக்க வழிதேடும் போது தணியாத பலருக்கு இரையாக வேண்டியிருக்கு. உளவியல் ரீதில் நீண்டகால தீர்வு வேண்டும். பல நாடுகளில் நேர அடிப்படையில் அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது. வயது வந்த எவரும் வந்து போகலாம். விலை மலிவு. அம்மாதிரி பரிசீலிக்கலாம். காதலன் அழைத்தான் என்று இம்மாதிரியான பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று விழிப்புணர்வை பறப்பலாம். இறுதில் சுய விழிப்ப அவசியம்.


Ramesh Sargam
நவ 05, 2025 00:00

உத்திரபிரதேசத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்திருந்தால், இந்நேரம் காமுகர்கள் சுட்டுவீழ்த்தப்பட்டிருப்பார்கள். அவர்களுடைய மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள் காரியம் எல்லாம் சிறப்பாக முடிந்திருக்கும். ஏன் தமிழக போலீஸ் அப்படி செய்யவில்லை என்று பலர் கேள்வி. ஏன் என்றால் அவர்கள்தான் திமுகவிற்கு ஏற்ற வரும்கால தலைவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் திமுகவில் பெரிய தலைவர்களாக வர தகுதி உடையவர்கள். புரிந்ததா?


சுந்தர்
நவ 04, 2025 21:35

எது எப்படி நடந்திருந்தாலும் கடைசில நாம எல்லாத்தையும் மறந்திட்ட பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு மாற்றி எழுதி குற்றவாளிகளை விடுவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சமீபத்திய ஒரு தீர்ப்பு அப்படித்தான் இருந்தது.


Srinivasan Narasimhan
நவ 04, 2025 21:30

திருமா டேனியல் முருகன் ராகா பிரியங்கா எல்லோருமா எங்கே


Ramesh Sargam
நவ 05, 2025 00:12

அவர்களுக்கும் இந்த கதி ஏற்படுமோ என்று பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் சகோதரா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை