உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் போலீஸ் எஸ்.ஐ.,

புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் போலீஸ் எஸ்.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை புதூரில், புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., சண்முகநாதன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக சண்முகநாதன் பணிபுரிந்து வருகிறார். ஹச்.எம்.எஸ்., காலனியை சேர்ந்த கவிதா குற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி சண்முகநாதன் இடம் கூறியுள்ளார். கடந்த காலத்தில் ஜெயந்திபுரம் பகுதியில் கவிதா வசித்தபோது, முன்விரோதம் காரணமாக தாக்குதலுக்கு ஆளாகப் பட்டார். இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இருவர் கைது செய்யப்பட ரூ.1 லட்சம் சண்முகநாதன் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு கவிதா தயக்கம் தெரிவித்ததால் ரூ. 70,000 தருமாறு சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.இதனை கொடுக்க கவிதாவுக்கு விருப்பமில்லை. அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ரூ. 30,000 லஞ்சம் கொடுக்க சண்முகநாதனிடம் முன்வந்துள்ளார். புதூர் பஸ் நிலையம் அருகே, சண்முகநாதனுக்கு கவிதா ரூ. 30,000 லஞ்சமாக கொடுத்தார். இந்த பணத்தை சண்முகநாதன் பைக் பெட்ரோல் டேங்கில் உள்ள கவரில், வைத்து கொண்டிருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இதையடுத்து, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையிலான போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kanns
ஜன 31, 2025 12:47

Simply Encounter All Anti Society Police Criminals After Summary Trials by No Advocate Panchayats & Courts


Barakat Ali
ஜன 31, 2025 07:41

எந்த பாவமும் செய்ய அஞ்சாதவன் மாதிரி இருக்கானே..... இவனா எஸ் ஐ ????


N.Purushothaman
ஜன 31, 2025 07:13

காவல்துறையில் ஏதோ மிக தீவிரமான பிரச்சனை உள்ளது...அதை கண்டுபிடித்து உடனடியாக களைத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் ....சமீபகாலமாக காவல்துரையினரே குற்றவழக்குகளில் சிக்குவது அதிகரித்து உள்ளது அபாயகரமானது.. அரசு இயந்திரம் முழுவதும் பாழ்ப்பட்டு நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளது ....


R VENKATARAMANAN
ஜன 31, 2025 06:44

It is not a surprise. No one can get their things done without paying corruption. This is not a stray incident in Tamilnadu since it prevails in all departments. Further, a percentage of the amount goes to the concerned ministry


Oru Indiyan
ஜன 30, 2025 22:31

இந்த பொறுக்கிக்கு என்ன தண்டனை கிடைக்கும்.


திகழ்ஓவியன்
ஜன 30, 2025 22:27

30000 ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்சம் , சரி எலெக்டரால் பாண்ட் 11000 கோடி இது என்ன ,சட்டப்படி லஞ்சம் அதாவது கமிஷன் இதற்கு யாரை கைது செய்வீர்கள் , பாண்ட் க்கு பணம் செலுத்தும் கார்பொரேட் கனவான்களையா , சரி அவன் என் பிஜேபி பேரில் எலெக்டரால் பாண்ட் எடுத்தான் , ஏன் எனில் 30000 வாங்கியவன் சாதாரண மனிதன் ஆனால் கோடி கணக்கில் வாங்குபவன் அரசியல் வியாதி


சந்திரன்,போத்தனூர்
ஜன 30, 2025 22:59

தமிழகத்தில் திமுக லாட்டரி மார்ட்டினிடம் பெற்ற நன்கொடை எத்தனை கோடிகள் என்று தெரிந்து கொண்டு கருத்தை பதிவிடு.


naranam
ஜன 30, 2025 23:16

ஒரே வருடத்தில் முப்பதாயிரம் கோடி சுருட்டிய தங்கள் மருமகனும் அப்படித்தானோ?


Ramesh Sargam
ஜன 30, 2025 22:15

தமிழகத்தில் நாளுக்கு நாள் போலீஸ் அதிகாரிகளே லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு நன்றாக தெரியும், திமுக ஆட்சியில் குற்றம் செய்பவர்களுக்கு அந்தளவு தண்டனை கிடைக்காது என்று. அந்த தைரியத்தால் தான் அவர்கள் தினம் தினம் லஞ்சம் வாங்குவது போன்ற குற்றங்களை செய்கிறார்கள். திமுக ஒழியவேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவேண்டும்.


Anu Sekhar
ஜன 30, 2025 22:04

இப்படி ஒவ்வொரு ஊழல் அதிகாரிகளையும் உள்ளே தள்ளுங்க. மக்களின் காசை தொடவே நடுங்கனும்


Murugesan
ஜன 30, 2025 21:50

ஊழல்ல பணத்தில வாழுகின்ற அயோக்கிய திராவிட அரசியல்வாதிங்க , அரசுத்துறைகளில் பணி புரிகின்றவர்களில் 99% திருடனுங்க,, கொள்ளைக்காரன்கள், இட ஒதுக்கீட்டில் வந்த தருதலைகள்


Raghavan
ஜன 30, 2025 21:14

இவனுகளையெல்லாம் நிக்க வைத்து சுடவேணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை