வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏமாத்துறதில் நம்பர் 1 வங்கிகள்தான். கஸ்டமர் சர்வீஸ் படு மோசம்
சென்னை:'வீட்டிலிருந்து வேலை, முதலீட்டு வழிகாட்டுதல் என, மனிதர்கள் தொடர்பு கொள்வது போல, சமூக வலைதளங்களில் மோசடி கும்பல், 'சாட்போட்கள்' பயன்படுத்துவதால், எச்சரிக்கை அவசியம்' என, தமிழக காவல்துறை, 'சைபர் கிரைம்' எச்சரித்துள்ளது.அதன் அறிவிப்பு:வளரும் டிஜிட்டல் யுகத்தில், சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள், முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து, 'வாட்ஸ் ஆப், டெலிகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் செய்திகளுக்கு, நாம் பதில் அளிப்பதால் துவங்குகிறது. இந்த மோசடிகள், ஆன்லைனில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம், தொழில் துவங்க ஆலோசனைகள் வழங்குகிறோம் என்ற வகையில் நடக்கிறது. மோசடி
இது போன்ற, 'லிங்க்'குகளை தொடர்பு கொள்ளும் போது, மறுமுனையில் மனிதர்களை போல் பேசுவது, 'சாட்போட்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சாதனமாக இருக்கலாம். சமீப காலமாக, வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்க, 'சாட்போட்'கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, மோசடி செய்பவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. சைபர் குற்றவாளிகள், நம்பத்தகுந்த வகையில், சாட்போட்களை பயன்படுத்தி, தனிநபரின் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். குறிப்பாக, அவர்களின் சுய விபரங்களை பகிர வைத்து ஏமாற்றுகின்றனர்.மனிதர்களை போலவே உரையாடும் சாட்போட்களின் திறன், வாடிக்கையாளர் சேவைக்கும், மோசடிக்கும் இடையிலான வேறுபாட்டை கண்டறிவதை கடினமாக்குகிறது. பகிர வேண்டாம்
மோசடியில் ஈடுபடுவோர், பெரிய நிறுவனங்களின் பெயரை பயன்படுத்துகின்றனர். தங்கள் நிறுவனத்தின் கொள்கை எனக்கூறி, அவர்களின் அடையாளங்களை மறைக்கின்றனர்.எனவே, அவர்களின் சுய விபரங்களை மறைக்கும் போது, அவர்களை நம்பி, பொதுமக்கள் தங்களின் சுய விபரங்கள் எதையும் பகிர வேண்டாம். எனவே, சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏமாத்துறதில் நம்பர் 1 வங்கிகள்தான். கஸ்டமர் சர்வீஸ் படு மோசம்