உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பறிமுதல் நகையை அபேஸ் செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை

பறிமுதல் நகையை அபேஸ் செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை

சென்னை: 'குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் நகைகள் குறைந்தால், விசாரணை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மண்டல ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.திருட்டு, செயின் பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, களவு போன நகைகளின் எடையை குறைத்து, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் போலீசார் பதிவு செய்கின்றனர்.குற்றவாளிகளை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்யும் போது, எப்.ஐ.ஆரில் குறிப்பிடாத நகைகளை போலீசார் எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நகைகளை திரும்ப ஒப்படைக்கும்போது, எப்.ஐ.ஆரில் எத்தனை சவரன் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த எடையுள்ள நகைகளை மட்டுமே, பாதிக்கப்பட்ட நபர்களிடம் போலீசார் ஒப்படைப்பர்.

வழிகாட்டி கையேடு

இதுபோன்ற செயலில் ஈடுபடும் போலீசார் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என, மண்டல ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துஉள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

புகார்தாரர் பறிகொடுத்ததாக கூறும் நகைகளின் முழு விபரங்களை, எப்.ஐ.ஆரில் குறிப்பிட வேண்டும். அத்துடன், குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் நகைகளை, உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஏற்கனவே வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் முறைகேடு நடப்பது தெரிய வந்ததால், அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும் நகைகளை உடனடியாக படம் எடுத்து, ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். யாரிடம் இருந்து, எவ்வளவு எடையுள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதையும், அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தையும் 'வீடியோ' ஆதாரமாக பதிவு செய்ய வேண்டும்.எத்தனை மணிக்கு பறிமுதல் செய்யப்பட்டது; யார் யார் அந்த இடத்தில் இருந்தனர்; பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் யார் என்பது தொடர்பான வீடியோ மற்றும் படங்களை, டிஜிட்டல் ஆவணங்களாக உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதிகாரியே பொறுப்பு

நகைகளை நீதிமன்றங்களில் ஒப்படைக்கும் போலீசாரே, அதற்கு முழு பொறுப்பு. நீதிமன்ற அனுமதியுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை, விசாரணை அதிகாரியே ஏற்பார். அதில் 1 மில்லி கிராம் குறைந்தாலும், விசாரணை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, ஐ.ஜி.,க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
ஜூலை 08, 2025 14:48

இளைஞர்களிடமிருந்து mobile phone ஐ புடிங்கி அசிங்கமாக பேசி, மிரட்டியடித்து அதன் password ஐ திறக்க சொல்லி குறைந்த பட்சம் 3000௹ கேட்டு வாங்குகிறார்கள் தங்கள் வண்டியில் கூட்டி அழைத்தும் ATM, கடைகள், அறைக்கும் செல்கிறார்கள் சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து இதற்கு என்ன செய்யப்போகிறார்கள் உண்மையான உயரதிகாரிகள். பஞ்சாயத்து என்கிற பெயரில் பணம் வாங்கி குற்றங்களை மறைத்தலும் நடக்கின்றது. Suspend செய்தால் சிறிய நாட்களுக்கு பிறகு மறுபடியும் அதே இடத்தில் தவறு செய்வார்கள் Transfer செய்தால் புதிய இடத்தில் புதியவர்களிடம் தவறு செய்வார்கள்.


Barakat Ali
ஜூலை 08, 2025 12:27

திராவிட ஆட்சிகள் உருவாக்கிய தராதரம் .....


Rajkumaran Nair
ஜூலை 08, 2025 11:35

சாதாரண மனிதன் திருடினால் சிறை தண்டனை போலீஸ் திருடினால் ஏன் சஸ்பென்ஷன் அவரை வேலை நீக்கம் மற்றும் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்


D Natarajan
ஜூலை 08, 2025 07:49

போலீஸ் என்றாலே லஞ்சம் தான். உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


Arul
ஜூலை 08, 2025 07:29

இதை விட கொடுமையான தண்டனை ஆயுத படைக்கு மாற்றலாம் ...எப்படி .. நம்ம சட்டம்


ஜூலை 08, 2025 10:22

அதைவிட கொடுமையான தண்டனை பக்கத்துக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்வது


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 07:26

விடியல் ஆட்சி இன்னமும் காவல்துறையை திமுகவின் ஒரு அணிபோலவே வைத்திருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது. மற்றவர் மீது நகை சந்தேகம் வந்தால் காவல்துறை அவர்களை அடித்தே கொல்வார்களாம் ஆனால் காவல்துறை மீது சந்தேகம் வந்தால் இடைப்பணி நீக்கம் மட்டும் செய்து வேறு இடத்துக்கு சத்தமில்லாமல் இடமாற்றம் செய்வார்களாம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 06:59

அதென்னங்க நியாயம். நகையை எடுத்ததுல சந்தேகம் வந்தா போலீஸ்காரங்களுக்கு சலுகையா?


anonymous
ஜூலை 08, 2025 05:10

Why suspention? Have two options. one: Promotion or two: Dismiss


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை