உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோ சட்டத்தில் போலீஸ்காரர் கைது

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (நவ 08) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ்காரர் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி 10ம் வகுப்பு படிக்கிறார். இவர், கிளியனுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி காதலனுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். பெற்றோர் புகாரில் ஆரோவில் போலீசார் விசாரித்தனர்.https://www.youtube.com/embed/boTQYhO1B48இந்நிலையில், 6ம் தேதி அதிகாலை, 4:30 மணியளவில், திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மாணவி தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோ, 40, மாணவியை நிறுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் இளங்கோ அங்கிருந்து சென்றுவிட்டார்.இந்நிலையில் ஆரோவில் போலீசார், நேற்று முன்தினம், மாணவியை சென்னையில் மீட்டனர்.விசாரணையில், இளங்கோ தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி கூறினார்.திண்டிவனம் போலீசார், இளங்கோவை போக்சோவில் கைது செய்தனர்.

வாலிபருக்கு 'போக்சோ'

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மரப்பாகரத்தை சேர்ந்தவர் கண்ணாயிரமூர்த்தி, 25. இவர், பருத்திச்சேரியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதை, சிறுமியின் தாய் கண்டித்துள்ளார். அவரை வாலிபர் மிரட்டியுள்ளார்.நவ., 5ல், கல்லுாரிக்கு சென்ற சிறுமியிடம், திருமண ஆசை வார்த்தை கூறி, தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு, சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின், 7ம் தேதி காலை சிறுமியை, அவரது வீட்டின் அருகில் விட்டு சென்றுள்ளார். திருத்துறைப்பூண்டி மகளிர் போலீசார், கண்ணாயிரமூர்த்தி மீது நேற்று போக்சோவில் வழக்கு பதிந்தனர்.

ஆசிரியருக்கு காப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 29; தனியார் பள்ளி வரலாறு ஆசிரியர். மூன்று மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.சுவாமிமலையில், அக்., 29ம் தேதி கடைக்கு பால் வாங்க சென்ற 15 வயது சிறுவனை, பாலசுப்பிரமணியின் பைக்கில் ஏற்றி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.அங்கிருந்து தப்பிய சிறுவன், பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். நேற்றுமுன்தினம் சுவாமிமலை போலீசில், பெற்றோர் அளித்த புகாரில், பாலசுப்பிரமணியனை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMAKRISHNAN NATESAN
நவ 09, 2025 14:48

அட ........ இரும்புக்கரம் வெச்சிருக்கிற பெரிய சார் கூட அப்படித்தானப்பா ....


பேசும் தமிழன்
நவ 09, 2025 13:54

விடியாத ஆட்சியில் வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே விழுப்புரத்தில் வெளி மாநில பெண்ணை அவரது தாயாரின் கண்ணெதிரிலேயே பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு காவல்துறை ஆட்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்போது இது வேறு !!!


தமிழ்வேள்
நவ 09, 2025 12:29

கட்டற்ற வரைமுறை இல்லாத காம வேட்கைக்கான காரணம், பள்ளிகளில் நீதிபோதனை மாரல் எஜுகேஷனை தடை செய்த திமுக தான். ஹிந்து தர்மத்தின் மீது பற்று இருந்தவரை இந்த அசிங்கமான நடத்தைகள் அதிகம் இல்லை. கடுமையான போதை பொருள் பயன்பாடு இன்னொரு காரணம்..திராவிடம் ஒழிந்தால் தமிழும் தமிழனும் வாழ்வான் தமிழன் வாழ திராவிடம் ஒழிய தமிழகத்தை மூன்று மாநிலங்களாக சிதறடிப்பது அவசியம்... ஒற்றை தமிழகம் உருப்படாது.


raja
நவ 09, 2025 11:53

அடடே ..முதல்வரின் துறையான காவல் துறையிலும் திராவிட மாடல் "சார்"கள் அதிகமாக இருப்பார்கள் போல... என்ன மாடலோ ..


சத்யநாராயணன்
நவ 09, 2025 10:39

தன்னுடைய சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதில் சிறிதும் அக்கறை இல்லாத அறிவு முதிர்ச்சி இல்லாத பெண்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சமுதாய பாதுகாப்பு கிடைக்கக் கூடாது கொடுக்கவும் வேண்டாம் ஆனால் சிறுமியர்களின் மனதை கெடுத்து குட்டிச்சுவராக்குவது இந்த சினிமா துறை தான் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை அதனால் 18 வயதிற்கு குறைவான சிறுவர் சிறுமியர்களை சினிமாவில் இருந்து பூர்த்தியாக விலகி இருக்க செய்ய வேண்டும் அது ஒன்றுதான் சமுதாய மறுமலர்ச்சியை கொடுக்கும் இல்லையென்றால் சமுதாயம் இப்படித்தான் சீரழிந்து போகும் எத்தனை சட்டங்கள் போட்டாலும் யாரும் திருந்த போவதில்லை


K.n. Dhasarathan
நவ 09, 2025 09:36

அந்த காவலர் இளங்கோவை சும்மா கைது பண்ணினோம், இட மாற்றம் பண்ணிவிட்டோம் என்று சப்பைக்கட்டு பண்ண கூடாது, பொலிஸ் துறைக்கே பெருத்த அவமானம் செய்து விட்டவனை, இனி மற்ற போலீசும் செய்ய நினைக்க கூட, இயலாத வகையில் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், கண்டிப்பாக ஜாமீன் கொடுக்க கூடாது, நீதி துறை கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும், குறைத்த பட்சம் கடும் ஆயுள் தண்டனை அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை போன்று கொடுக்க வேண்டும், வெறுமே சட்டம் இதைத்தான் சொல்கிறது என்று எளிதாக விட கூடாது.


N.Balasubramanian
நவ 09, 2025 08:34

அருமையான பதிவு


duruvasar
நவ 09, 2025 08:17

அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி .


VENKATASUBRAMANIAN
நவ 09, 2025 08:12

இதுதான் திராவிட மாடல் அரசு. காவல்துறை ஏவலதுறை ஆகியதின் விளைவு. இந்த ஆட்சி தொடர்ந்தால் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்


Mani . V
நவ 09, 2025 07:24

என்ன கருமாந்திரம் இதெல்லாம்? ஆமா, நாட்டில் நடப்பது ரௌடிகளின் ஆட்சியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை