உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்

திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார். இம்மைதானத்தில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் கூட்டம் இருக்கும். நேற்று இரவு மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரியும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா, 28, தன் குடும்பத்தினருடன் வ.உ.சி., பூங்காவிற்கு வந்திருந்தார்.அப்போது, அங்கு ரவுடிகள் சிலர் சேர்ந்து, ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தனர். சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா அந்த கும்பலை சமாதானப்படுத்தி, அந்த நபரை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தார். அதிலிருந்த ஒருவர் ஆத்திரத்தில் அரிவாளால் முகமது ரகமத்துல்லா கையில் வெட்டினார்.இதில், படுகாயமுற்ற அவர், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தப்பிய நபர்களை போலீசார் தேடி வந்தனர்.தற்போது, 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

N Sasikumar Yadhav
ஜூன் 23, 2025 16:29

திராவிட மாடல் அப்பா ஆட்சியில் ரவுடிகள் அமோகமாக வளர்ந்திருக்கிறார்கள் . தமிழக காவால்த்துறை கைகள் கட்டப்பட்டிருக்கிறது


V Venkatachalam
ஜூன் 23, 2025 14:38

புலீஸ்காரர்தானே..அதானே பார்த்தேன். ஏடிஜிபி, டிஜிபி லெவலுக்கு போயிட்டுதோன்னு கொஞ்சம் பயந்துட்டேன். எங்க சூப்பர் முதல்வர் ஆட்சியில இருக்குற வரைக்கும் அந்த லெவலுக்கெல்லாம் போகாதுங்குற நம்பிக்கை இருக்கு.


Ramesh Sargam
ஜூன் 23, 2025 14:35

தமிழகத்தில் போலீஸ்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில் அவர்கள் எங்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்படமுடியும். திமுக ரவுடிகள் அனைவரும் என்கவுண்டர் செய்யப்படவேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 23, 2025 12:22

எல்லாம் கிம்ச்சை மன்னர் பார்த்துக்குவாரு ..... கவலையை உடுங்க ......


A P
ஜூன் 23, 2025 10:48

அந்த காலத்தில் மதிப்புமிக்கவரான போலீஸ்காரர் எதிரே வருகிறார் என்றால், என் சைக்கிளில் பெல், லைட் இல்லையென்றால், பயத்தில் எனக்கு ஒண்ணுக்கு வந்துவிடும். சாதா போலீசுக்குக் கூட நாங்களெல்லாம் சல்யூட் வைத்ததை நினைத்தால், தற்போது கடந்த 70 வருடங்களாக அரசுகள் எப்படி காவலர்களுக்கு 1% கூட மக்களிடமிருந்து மரியாதை கிடைக்காமல் கெடுத்து குட்டிச் சுவராக்கி வைத்துள்ளவை என்று நினைக்கும் போது திராவிட கட்சிகளின் மேல் எத்தகைய ஒரு தீராத வெ00றுப்பு வரும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒழியட்டும் திராவிட கும்பல். தமிழ்நாட்டில் தர்மம், ஒழுக்கம், நேர்மை, நியாயம் நன்றாக விளங்கி, மக்கள் சுபிக்ஷமாக வாழட்டும். முருகா போற்றி. கந்தா போற்றி, கடம்பா போற்றி, வடிவேலா போற்றி. சூரனொருவனை அப்போது சம்ஹாரம் செய்து, மக்களைக் காப்பாற்றினாய். இப்போது ஒண்ணேகால் கோடி அசுரர்கள் நேர்மையில்லாமல் ஒழுக்க நெறி தவறி தீய அரசுகளால், நடத்தப் படுகிறார்களே தமிழ் நாட்டில். பார்த்துக் கொண்டிராதே. ஓடோடி வா முருகா.


ramesh
ஜூன் 23, 2025 12:57

தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அணைத்து மாநிலங்களிலும் தற்போது இதே நிலை தான் காவல் துறையில் உள்ளது . அயோத்தியில் ராமர் கைவிட்டாரே மறந்து விட்டீர்களா . கடவுளுக்கு தெரியும் தன்னுடைய பெயரை ஆதாயத்துக்கு தான் பயன் படுத்து கிறார்கள் என்று . பிறகு எப்படி கடவுள் ஓடோடி வருவார் .


Kjp
ஜூன் 23, 2025 10:03

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா.உபி குஜராத் பீகாரைப் பார் என்று முட்டு கொடுப்பதை தவிர கொத்தடிமைகளுக்கு ஒன்றும் தெரியாது.முதல்வரிடம் இருந்து இந்த மாதிரிக்கெல்லாம் பதில் வராது.தற்புகழ் புராணம் எழுதி கொடுத்ததை வாசிக்கத்தான் தெரியும்.


rasaa
ஜூன் 23, 2025 09:22

காவலருக்கு இந்த கதி என்றால், பொதுமக்களின் நிலை.


Kjp
ஜூன் 23, 2025 10:10

அதான் ஆயிரம் ரூபாய் இலவச பயணம் கொடுக்கிறோமுல்ல.உலக நாடுகளில் தமிழகத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று உருட்டுகிறோம்ல.போவியா.


Sridhar
ஜூன் 23, 2025 08:54

But the police should not act. They can be put behind bars without bail for more than 5 years even when drug smugglers and terrorists can be given bail in less than an year


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூன் 23, 2025 08:51

திராவிட மாடல் சந்தி சிரிக்குது


HoneyBee
ஜூன் 23, 2025 08:50

இதுதான் உண்மையான திராவிட மாடல். போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை. யப்பா போதும்டா சாமி


முக்கிய வீடியோ