உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகள் மீது புகார் அளித்த காவலர் பாலியல் வழக்கில் கைது

அதிகாரிகள் மீது புகார் அளித்த காவலர் பாலியல் வழக்கில் கைது

தென்காசி: பாலியல் புகாரில் கைதானவர் உட்பட இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைலஷ், 38. கடந்த, 2003ல் போலீசில் பணிக்கு சேர்ந்தார். இவர் பணியாற்றிய கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகாரிகள் மீது புகார் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.தென்காசி மாவட்டம், சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போது, அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர் ஊத்துமலைக்கு மாற்றப்பட்டார். இரண்டு மாதங்களாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.அவர் மீது புளியங்குடி பகுதியை சேர்ந்த பெண் அளித்த புகாரில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய சைலஷ் மற்றும் இன்னொரு போலீஸ்காரர் செந்தில்குமார் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை