உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாவட்டங்களில் வரும் 12ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

6 மாவட்டங்களில் வரும் 12ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: செங்கல்பட்டு, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், வரும் 12ம் தேதி, தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடக்கிறது.தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில், வரும் 12ம் தேதி நடக்கிறது.அரசு நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களில், இந்த முகாம்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.'நல்வாழ்விற்கான இரு துளிகள், போலியோ இல்லா வெற்றிநிலை தொடரட்டும்' என்ற தலைப்பில் இம்முகாம் நடக்கிறது.இம்முகாம்களில், 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் அடுத்தக்கட்டமாக சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி