உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் அரசியல் மாற்றம்

பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் அரசியல் மாற்றம்

நாமக்கல்:மத்திய அரசின், 'பாரத் அரிசி' விற்பனை துவக்க விழா, நாமக்கல் மாவட்ட பா.ஜ., சார்பில்,நடந்தது. மாநில துணைத்தலைவர்கள் துரைசாமி, ராமலிங்கம், விற்பனையை துவக்கி வைத்தனர். பின், இருவரும் கூறியதாவது:இன்னும் ஓரிரு வாரங்களில் பல்வேறு கட்சிகளின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். லோக்சபா தேர்தலில், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும். விஜயதரணி பா.ஜ.,வில் இணைந்ததால், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்துள்ள நிலையில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தொகுதியான திருக்கோவிலுாரை காலியிடமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.பிரதமரின் வருகை, தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், தேச ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கை இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளபோதும், முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்