உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை:'டெல்டா பகுதியில், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, தகுந்த நிவராணம் வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.அதன் விபரம்:பழனிசாமி: 'தமிழகம் முழுதும் அதி கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், 1,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை, உரிய அதிகாரிகள் உடனே பார்வையிட்டு, தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:ஆண்டுதோறும் பருவ மழை காலத்தில், டெல்டா பகுதியில் சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர் கதையாகிறது. பாசன கால்வாய்களை துார்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், தி.மு.க., அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது.இதன் விளைவு, இந்தாண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள், 2,000 ஏக்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம், டெல்டாவில் நடக்கும் விவசாயம் தான். ஆனால், இதுகுறித்து சிறிதும் கவலை இல்லாமல், கருணாநிதிக்கு சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே, தி.மு.க., அரசு செய்கிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 40,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும். -அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: டெல்டா மாவட்டங்களில், இடைவிடாது மழை பெய்து வரும் கனமழையால், நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கும் நெற்பயிர்கள், பாதிப்புகளை முறையாக கணக்கிட்டு, விவசாயகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை