உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கல் பஸ் ஓடும்

ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கல் பஸ் ஓடும்

கடலுார் : ''போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பயணியருக்கு பாதிப்பு இல்லாத வகையில், பொங்கல் பண்டிகையின் போது, தடையின்றி அரசு பஸ்கள்இயக்கப்படும்,'' என, போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மணல் குவாரி கலவரம் தொடர்பாக, கடலுார் கோர்ட்டில் ஆஜராக வந்த அவர் கூறியதாவது:

போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள், கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதற்கு, முதல்வர் வழங்கும் நிதி தான் காரணம்.டீசல் மானியம், மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாணவர்களுக்கு இலவச பாஸ் போன்றவற்றுக்கு அரசு வழங்கும் நிதி வாயிலாகவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.பொங்கலின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது. பொங்கல் பண்டிகை சமயத்தில், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து வழங்கப்படவில்லை. அப்போதெல்லாம் கேட்காத தொழிற்சங்கத்தினர், இப்போது கேட்பதற்கு உள்நோக்கம் உள்ளது.பொங்கல் பண்டிகையின் போது, தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டாலும், பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு சிவசங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R S BALA
ஜன 05, 2024 19:39

ஒரு பராமரிக்காத பொது கழிப்பறையினை விட மிக மோசமாக உள்ளது அனைத்து வெளியூர் செல்லும் அரசுப்பேருந்துகளும்.. வழியில் உணவுக்காக ஒரு இடத்தில் நிறுத்திய பொது ஓட்டுநர் ஒருவர் பிரேக் சரியாகவே வேலைசெய்யவில்லை என்று கூறினார் எத்தனையோ முறை புகார் செய்தும் பலனில்லை என்றார் பயணம் செய்யவே மிக அச்சமாக உள்ளது..


lana
ஜன 05, 2024 17:14

கடந்த ஆட்சியில் போராட்டம் நடந்த போதே அங்கு சென்று அடுத்த நமது ஆட்சியில் எல்லா கோரிக்கை நிறைவேற்ற படும் ன்னு அறிக்கை தேர்தல் அறிக்கையில் கொடுத்தது யார் என்பது ஊருக்கு தெரியும்


வெகுளி
ஜன 05, 2024 15:27

நானே ஒரு கம்யூனிஸ்ட்டுன்னு சொன்னதெல்லாம் நடிப்பா கோப்பால்? ....அத்தனையும் நடிப்பா?...


duruvasar
ஜன 05, 2024 12:14

"ஓய்வூதியர்கள் அகவிலைப்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து வழங்கப்படவில்லை. அப்போதெல்லாம் கேட்கவில்லை. இப்போது உள்நோக்கத்துடன் கேட்கிறார்கள்" போதும் நிறுத்துங்க. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே உருட்ட போறீங்க. பெண்களுக்கு இலவச பஸ் வேண்டும் என யாரும் கேட்கவில்லை உங்கள் விளம்பரத்திற்காக அறிவித்தீர்கள். அதுபோக அவர்களின் உள் நோக்கத்தை விடுங்க, அவங்க கோரிக்கைகளைப் பற்றிய உங்கள் நோக்கங்கள் என்ன , முதலில் அதை தெளிவுபடுத்துக்ங்கள்.


S.L.Narasimman
ஜன 05, 2024 12:07

அதிமுக ஆட்சியிலே கொடுக்காததை நாங்க கொடுக்குறோம்ன்னு பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிய புடிச்சு மந்திரி ஆனா. இப்ப குத்துது கொடையததா.


ஆரூர் ரங்
ஜன 05, 2024 09:09

பொங்கல் நெருங்கும் நேரத்தில் ஸ்ட்ரைக் ன்னா பின்னணியில் கழக ஆம்னி பஸ் ஆட்களா?????


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 09:39

இல்லை BJParty ஆட்களின் சதி.


enkeyem
ஜன 05, 2024 11:26

போக்குவரத்து தொழிற் சங்கங்கள் எல்லாம் தி மு க, கம்யூனிஸ்ட், ம தி மு க, ஐ என் டி யு சி அடங்கிய அள்ளும் கட்சி சார்ந்தவை. அ தி மு க மட்டும் எதிர்கட்சி சார்ந்தது. அப்போ பி ஜெ பி ஆட்களின் சதி என்றால் எல்லா தொழிற் சங்கங்களும் பி ஜெ பி க்கு விலை போய் விட்டனவா? இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?


Prabakaran J
ஜன 05, 2024 08:50

AIADMK not doing anything why we (DMK) do - good explanation from the transport minister. Finally, suffer people/govt staffs.


Rajarajan
ஜன 05, 2024 08:43

அது எப்படி ஓடும் ?? அது என்ன நீட் தேர்வு மாதிரி ரகசியம் ?? சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போமே ப்ளீஸ். ஓ புரியுது. தேவைப்படறவங்க, அவங்களே பேருந்தை எடுத்து ஒட்டிக்கிட்டு போகணும். அதானே அந்த ரகசியம் ??


Bye Pass
ஜன 05, 2024 07:33

We are inviting Corona new variant


Ramesh Sargam
ஜன 05, 2024 07:31

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அவற்றை ஏற்று அதை நிறைவேற்றவேண்டும். அதைவிட்டு விட்டு, அவர்கள் கோபம் அதிகரிக்கும்படி 'ஸ்டிரைக் நடந்தாலும் பொங்கல் பஸ் ஓடும்' என்று கூறுவது சரியல்ல. வீம்புக்கு ஆட்சி செய்வது சரியல்ல. மக்கள் விரும்பும்படியாக ஆட்சிபுரியவேண்டும்.


மேலும் செய்திகள்