மேலும் செய்திகள்
சேவை மையங்களாக மாறிய 3,085 கூட்டுறவு சங்கங்கள்
17-Nov-2024
சென்னை : பொங்கல் மளிகை தொகுப்பில் இடம் பெறும் பொருட்களை, கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதேபோல், உணவு துறையின், 'அமுதம்' அங்காடிக்கும் உத்தரவிட்டால், தனியார் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு பொருட்கள் வாங்குவது தடுக்கப்பட்டு, சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் சில கூட்டுறவு சங்கங்கள், மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள், மாவு வகைகள் போன்றவற்றை தயாரிக்கின்றன. இவை, கூட்டுறவு அங்காடிகளில் விற்கப்படுகின்றன. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுதும் உள்ள கூட்டுறவு அங்காடிகளில், 199 ரூபாய், 499 ரூபாய், 999 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்புகள் விற்கப்பட உள்ளன.இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள மஞ்சள் துாள், மசாலா துாள், மாவு பொருட்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், சேலம், திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்று, அங்காடிகளை நடத்தும் அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகமும், 'அமுதம்' அங்காடிகளில் பொங்கல் மளிகை தொகுப்பை விற்க உள்ளது.எனவே, இந்த தொகுப்பில் உள்ள மளிகை பொருட்களையும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வாங்க அரசு உத்தரவிட வேண்டும். இதனால், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, அதிக விலைக்கு வாங்குவது தடுக்கப்படும்; கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும்.
17-Nov-2024