மேலும் செய்திகள்
கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
23-Dec-2024
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் பொங்கல் வைக்கும் போட்டி நடந்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.ரிக்க்ஷா சேலஞ்ச் சுற்றுலா திட்டத்தில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 21 பேர் தமிழகத்தில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடியை சுற்றிப் பார்க்க ஆட்டோவில் புறப்பட்ட இவர்கள் பயணத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம் துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இதற்கிடையே, தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் பொங்கல் வைக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில், ஆட்டோவில் சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே, கரும்பு, பொங்கல் வைப்பது தான் நினைவிற்கு வரும். இந்நிலையில் வரும் ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
23-Dec-2024