வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அணை ஏரியை கண்காணிக்க வேண்டும்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். நீர் இருப்பு 34.05 அடியாகவும், கொள்ளளவு 2,839 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1ee3mohs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று (டிச.,12) மாலை 5 மணியளவில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தற்போது வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.செம்பரம்பாக்கம் ஏரி!
கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அணை ஏரியை கண்காணிக்க வேண்டும்