உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு; சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு; சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூரில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக, நேற்று (அக்.,16) 700 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த சூழலில் நேற்றிரவும் கனமழை கொட்டித் தீர்த்ததால், பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக, ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 2,300 கனஅடியில் இருந்து 4,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உபரி நீர் கால்வாய் அருகே தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
அக் 16, 2025 12:38

ஏப்ரல் மேயில் லாரியில் கொண்டுபோய் குடிநீர் கொடுபோம். எதுவாக இருந்தாலும் பேய்க்கேஜு தான்


Vasan
அக் 16, 2025 11:16

இது போன்ற நீர் மிகை காலங்களில், உபரி நீரை வீணாக்காமல், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், கிண்டி தொழிற்பேட்டைகளுக்கு குழாய் மூலம் மெட்ரோ வாட்டர் இலவசமாக கொடுத்தால், அவர்கள் நிலத்தடி நீருக்கு பதில் இதை உபயோகப்படுத்தி கொள்ளலாமே.