உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு; சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு; சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், திருவள்ளூரில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மோன்தா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 35 அடியைக் கொண்ட ஏரியின் மொத்த நீர்மட்டம் 33 அடியை நெருங்கியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 4,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், பூண்டி ஏரி நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்கள் மற்றும் உபரி நீர் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !