உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆபாச ரீல்ஸ் வழக்கில் சிக்கிய யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா 54. மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5co81r8h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திவ்யா கள்ளச்சி என்ற யுடியூப் சேனல் நடத்தி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா 30, ஈரோட்டைச் சேர்ந்த கீழக்கரை கார்த்திக் என்ற யுடியூப் சேனலை நடத்தி வரும் கீழக்கரை கார்த்திக் 30, என்பவரும் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்துள்ளதாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சித்ரா புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய வங்கி கணக்கை ஹேக் செய்து ரூ.2.5 லட்சத்தை திவ்யா எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.இதனையடுத்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தினார். அதில் யுடியூபர்கள் திவ்யா , கீழக்கரை கார்த்திக் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்துாரில் வைத்து சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச ரீல்ஸ் எடுத்தது தெரிய வந்தது.இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி புகாரில் திவ்யா, கீழக்கரை கார்த்திக் ஆகியோரிடம் ஏ.டி. எஸ். பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி விசாரித்தனர். விசாரணையில் சித்ரா சொல்லி தான் வீடியோ எடுத்ததாக கார்த்திக் கூறியுள்ளார்.இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

நிக்கோல்தாம்சன்
மார் 11, 2025 05:59

முராவிடர் மாடலை பின்பற்றி வருகிறார்களே யுடுபர்கள்


RAJA
மார் 10, 2025 23:10

ஒரு மூஞ்சியாவது நல்லா இருக்கா . இதுகளுக்கு இப்படி ஒரு ஜல்சா ஆசை.


Ramesh Sargam
மார் 10, 2025 20:19

கைது செய்வதால் என்ன பிரயோஜனம்? சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் பெற்று வெளியில்வந்து தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பல ஆண்டுகள் செல்லும். முடிவில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் இந்த நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்கிறது என்று எப்பொழுதும்போலே ஒரே தீர்ப்பு அளிக்கும். நாம் பார்க்காத தீர்ப்புக்களா...?


தாமரை மலர்கிறது
மார் 10, 2025 20:07

திருட்டு திராவிடத்தின் ஆபாசமணிகள்.


Appa V
மார் 10, 2025 19:14

இன்னும் ஒரு பெண்மணி அவா பாணியில் தரக்குறைவாக பேசும் வழக்கம் கொண்டவர் இவருக்கு சில திராவிட முட்டு கொடுத்து கொம்பு சீவிவிடுகிறார்கள்


SUBRAMANIAN P
மார் 10, 2025 17:44

இது அத்தனைக்கும் காரணம் பணம் சம்பாதிக்க குறுக்கு வழி பேராசை. உழைப்பு இங்கு கேள்விக்குறி. இதுபோன்றவர்களை யூடியூப் ஊக்குவிக்கக்கூடாது. டெர்மிநேட் செய்துவிடவேண்டும். அதுமட்டுமல்லாமல் காவல்துறை இவர்கள்மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் மாவுக்கட்டு போட்டாலும் தப்பில்லை. எத்தனையோ நல்லவிஷயங்கள் இருந்தாலும் மக்களும் இதுபோன்ற அல்பமான விஷயங்களிலேயே நாட்டத்தை செலுத்துவதால் இவர்கள் விரைவாக வளர்கிறார்கள். சமுதாய சீர்கேடு, இதுவே திராவிட மாடலும். பெரியாரின் பிள்ளைகள், பேத்திகள், பேரன்கள்.


தமிழ் நாட்டு அறிவாளி
மார் 10, 2025 16:50

கொள்ளையடித்த பணத்தை என் வக்கீல் வண்டுமுருகனிடம் தான் கொடுத்தேன் என்பது போல் உள்ளது உங்கள் வழக்கு


மாலா
மார் 10, 2025 16:36

மிகவும் நல்லது இந்த வகையில் இன்னும் ஒரு நடுத்தர வயது பெண் உள்ளார் அவரையும் உடனியாக


அரவழகன்
மார் 10, 2025 16:22

மற்றவர்கள் இவர்கள் பாடம்....