உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலில் தபால் ஓட்டுகள்; 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகள் எண்ணப்படும்: சத்யபிரதா சாகு தகவல்

முதலில் தபால் ஓட்டுகள்; 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகள் எண்ணப்படும்: சத்யபிரதா சாகு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் கடைசி சுற்றுக்கு முன், தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படும்' என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை (ஜூன் 04) நடைபெற உள்ளது. இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில், சத்யபிரதா சாகு கூறியதாவது: ஓட்டு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொது பார்வையாளர்கள் தமிழகம் வந்தனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் கரும்பலகையில் எழுதிப்போடப்படும். காலை 8:30 மணி முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.

அரசியல் பிரமுகர்கள்

அனைத்து சுற்று ஓட்டு எண்ணிக்கையும் முடிந்தவுடன், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையையும் சேர்த்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் ஓட்டு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். ஓட்டு எண்ணும் மையங்களில் எந்த விதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gopalan
ஜூன் 03, 2024 20:14

இப்போது சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்கள் பிரசிடெண்ட் அவர்களுக்கு கடிதம் எழுதியது தேர்தல் ஆணையம் கலைந்து விடுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. பணம் பட்டுவாடா பற்றி ஜட்ஜ்கள் சந்தேகம் கொண்டு எழுதுனாலும் ஆச்சர்யம் இல்லை. தேர்தல் ஆணையம் வேலை மிகவும் கடினம். இருப்பினும் சுப்ரீம் கோர்ட் சொன்னால் இவர்களின் வேலைக்கு எப்போதும் சந்தேகம் தான்.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜூன் 03, 2024 20:07

முதலில் இந்த திமுக அடிவருடியான தமிழக தேர்தல் ஆனையராக இருக்கும் சத்தியபிரதா சாஹூவை உடனே வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.


M Ramachandran
ஜூன் 03, 2024 19:34

வேறு சரியான நபர் தமிழ்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு கிடைக்க வில்லையா/ நடவடிக்கையயை ஒரு சார்பாகா கருப்பு சாயம் படர்ந்திருக்கு


A1Suresh
ஜூன் 03, 2024 19:27

சபாஷ் பாராட்டுக்கள் ஜி. எதிர்கட்சிகள் சொல்வது போல தபால் வாக்கு முடிவுகளை முதலிலேயே அறிவிக்காமல் கடைசி சுற்றின் முன்னரே அறிவித்தல் என்பது சரியான ராஜதந்திரம் தான்.


P. VENKATESH RAJA
ஜூன் 03, 2024 19:19

தபால் ஓட்டுகள் தான் முக்கியம்..அதனை கண்ணியமாகவும், நேர்மையாகவும் எண்ண வேண்டும்


A1Suresh
ஜூன் 03, 2024 19:01

இம்முறை வாக்கு எண்ணும்பொழுது மிகப்பெரிய கலவரமோ, குழப்பமோ நிகழ்த்த எதிர்கட்சிகள் தயாராக இருப்பதாக நினைக்கிறேன். வெளிநாட்டி சதியும் கட்டாயம் உண்டு. எல்லைகளும் கண்காணிக்கப்பட வேண்டும்


Saai Sundharamurthy AVK
ஜூன் 03, 2024 18:53

அதென்ன தபால் ஓட்டுக்கள், தபால் ஓட்டுக்கள் என்று எதிர்க்கட்சிகள் மண்டையில் அடித்துக் கொள்கிறார்கள்...!!!


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி