உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதிக்கு எதிராக போஸ்டர்: கிழித்தெறிந்த தி.மு.க.,வினர்

உதயநிதிக்கு எதிராக போஸ்டர்: கிழித்தெறிந்த தி.மு.க.,வினர்

சென்னை : சென்னை அண்ணா பல்கலையின் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாக கோட்டூர்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 'தனக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியவர், போனில் பேசும்போது சார் என யாருடனோ பேசினார்' என புகாரில் அம்மாணவி குறிப்பிட்டுஉள்ளார்.இதையடுத்து, குற்றவாளி என போலீசார் அடையாளம் கண்டிருக்கும் ஞானசேகரன், 'சார் என யாரிடம் பேசினார்?' என எதிர்க்கட்சிகள், தமிழக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுக்கின்றன. குறிப்பாக, அ.தி.மு.க., சார்பில், 'யார் அந்த சார்?' என கேட்டு, போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்ததோடு, முக்கியமான இடங்களில், அதே கேள்வியுடன் பதாகைகள் ஏந்தியும் மக்கள் கவனம் ஈர்த்தனர். இந்நிலையில், 'யார் அந்த சார்? சீக்கிரம் கண்டுபிடித்துச் சொல்லுங்க உதயநிதி சார்' என அச்சிடப்பட்ட போஸ்டர்கள், துணை முதல்வர் உதயநிதியின் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் பா.ஜ., சார்பில் ஒட்டப்பட்டு உள்ளன. உதயநிதியை வம்புக்கிழுப்பது போல ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களை, தொகுதி தி.மு.க.,வினர் கிழித்தெறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Ramakrishnan
ஜன 01, 2025 16:34

பிரச்சினையை திசை திருப்புவதில் என்ன லாபம்.சும்மா இருந்ததால் நல்லது.


Vijay D Ratnam
ஜன 01, 2025 15:49

ஒங்க இஷ்டத்துக்கு போஸ்டர் ஓட்டுவீங்களா. மா.சுப்ரமண்யம், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மகேஷ் பொய்யாமொழி போன்ற தமிழ்நாட்டுக்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கும் உத்தமர்கள் பெயர்களை இஷ்டத்துக்கு ஆளாளுக்கு இழுக்காதீங்கப்பா.


Constitutional Goons
ஜன 01, 2025 15:49

யார் அந்த சார் என்று பழனிச்சாமியிடமே கேட்டுவிடவேண்டியதுதானே?


தமிழன்
ஜன 01, 2025 15:00

போராடும் களத்தில் உள்ளவர்கள் "யார் அந்த சார்?" என கேட்பதற்கு பதில், முதல்வரை வர சொல்.. என்று கோஷமிட்டு முதல்வரை பேச வைத்தால், அந்த சார் தானாக வந்து விடுவார்.. விடை கிடைக்க வேண்டும் என்றால், மாணவர்கள் முதல்வரை பொது வெளியில் மக்கள் முன் பேச வைக்க வேண்டும்.


தமிழன்
ஜன 01, 2025 14:56

அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு இது தான் - "யார் அந்த சார்?" என்று சொல்லும்படி ட்ரெண்ட் ஆக்கி விட்டாங்க


தமிழன்
ஜன 01, 2025 14:55

5 கோடி டி ஷர்ட் ஆர்டர் போட்டு, யார் அந்த சார் என அதில் பிரிண்ட் போட்டு கொடுத்தால், ஒரு டி ஷர்ட் விலை என்ன வரும் என நினைக்கறீங்க.. டி ஷர்ட் மட்டுமா? தொப்பி பேணா mouse pad என இனி இது தான் ட்ரெண்ட் ஆகும் போல.. அதிமுகவின் இந்த creative idea வை பாராட்டியே ஆக வேண்டும்


தமிழன்
ஜன 01, 2025 14:52

வங்கிக்கு போயிருந்தேன்.. இதில் மேனேஜரிடம் கையெழுத்து வாங்கிட்டு வாங்க என ஒரு படிவம் கொடுத்தாங்க? "யார் அந்த சார்?" என்று வங்கி அதிகாரியிடம் கேட்டேன் .. என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு அவரே மேனஜரிடம் போய் கையெழுத்து வாங்கி வந்து விட்டார்.. "யார் அந்த சார்?" பார்முலா நல்ல வேலை செய்யுது போல


தமிழன்
ஜன 01, 2025 14:49

திமுகவினருக்கு வேலை கொடுக்கும் எதிர்க்கட்சிகள் என்று அல்லவா தலைப்பு செய்தி போட்டு இருக்க வேண்டும்.. அந்த சார் யாருங்க


தமிழன்
ஜன 01, 2025 14:48

போஸ்டர் ஓட்டினால் கிழிக்கறாங்க சரி.. யார் அந்த சார் என டீ ஷர்ட் போட்டா என்ன செய்வாங்க..


தமிழன்
ஜன 01, 2025 14:47

மோடி ஜி அறிமுகப்படுத்திய ஸ்வாட்ச் பாரத் திட்டம் இப்போ தான் செயல்பாட்டிற்கு வந்து இருக்கா


முக்கிய வீடியோ