உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டிக்கு அழைப்பு; விஜய் கட்சியினரின் போஸ்டர்

விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டிக்கு அழைப்பு; விஜய் கட்சியினரின் போஸ்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டிற்கு பல்வேறு நெருக்கடிகளை தி.மு.க., கொடுத்து வருவதாக, அரசுக்கு எதிராக, 'மாநாட்டிற்கு அழைப்பு' என்ற பெயரில் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அரசியலில் இறங்கியுள்ள விஜய், முதன்முதலாக தன் கட்சி மாநாட்டை விக்கிரவாண்டியில் நாளை நடத்துகிறார். இதற்காக, போலீஸ், மின் வாரியம் என பல துறைகளிலும் அக்கட்சியினர் அனுமதி வாங்க போராட வேண்டிஇருந்தது.இதற்கு, ஆளும் தி.மு.க., அரசு தான் காரணம் என்று அக்கட்சியினர், அ.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.அதேசமயம் தொண்டர்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக, இதுவரை மூன்று முறை விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்., 4ல், விக்கிரவாண்டி சாலையை குறிப்பிட்டு, 'வெற்றிச்சாலை' என்றும்; அக்., 20ல், 'விவேக சாலை' என்றும்; நேற்று, 'வியூகச்சாலை' என்றும் குறிப்பிட்டு, '2026 சட்டசபை தேர்தல் தான் நம் இலக்கு' என்ற ரீதியில் கடிதம் எழுதி, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.இதற்கிடையே, மதுரையில் விஜய் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 'அக்., 27ல் மன்னராட்சிக்கு முடிவு; தளபதியால் மக்கள் ஆட்சிக்கு விடிவு. நீங்கள் மட்டுமே நடமாடும் முதல்வர், விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டிக்கு அழைக்கிறார்' என போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

நிக்கோல்தாம்சன்
அக் 26, 2024 15:46

வளர்த்து விடப்படும் வாத்து கறிக்கடைக்கே செல்லும் அன்று பாமக , நேற்று விசிக நாளை தவேக


M Ramachandran
அக் 26, 2024 12:37

அடுத்த ஜிங்ச்சா கட்சி தயாராகுது


வைகுண்டேஸ்வரன்
அக் 26, 2024 12:35

ஒரே ஒரு போஸ்டரில், அத்தனை பிஜேபி காரர்களையும் ஜோசப் என்கிற வார்த்தை யை மறக்கடித்து விட்டார். அரசை வீழ்த்தவா?எப்படி?


sridhar
அக் 26, 2024 12:32

அல்லேலூயா vs அல்லேலூயா .


Pandi Muni
அக் 26, 2024 12:09

ஈ.வே ராமசாமிய எவன் ஒருத்தன் தூக்கி பிடிக்கிறானோ அவன் அந்நிய கைக்கூலியாக மட்டுமே இருப்பான். இந்திய தேச பற்றுள்ளவர்களே இந்துக்களே ஏமாறாதீர்கள்


raja
அக் 26, 2024 12:03

உடன் பருப்பெ... நமது கழக ஆட்சி போல் பொங்கல் தொகுப்பில் 500 கோடி, வந்த ஆறு மாதத்திலேயே ருவா 30000 கோடி, இப்போ வெல்ல நீர் வடிகால் வாய்க்காலில் 4000 கோடி டான்ஜெட்கோ ஊழல் ஆட்சியில் அமர்த்த நாள் முதல் அதாவது 11.45 லிருந்து மணல் கொள்ளை, கனிமங்களை கேரளாவுக்கு கடத்தல் மின்சார கட்டணம், சொத்து வரி போன்ற கட்டணங்களை உயர்த்தியது தேர்தல் வாக்குறுதிகளை நிறவெற்றாமல் தமிழனை ஏமாற்ரியது போலவா பிஜேபி செய்தது...


Balasri Bavithra
அக் 26, 2024 10:43

இதுவும் அவர்களின் ஒரு அங்கமே ..எப்படி கமலுக்கு வோட்டு போட்டு ஏமாந்தமோ அதேய்


R SRINIVASAN
அக் 26, 2024 09:49

MGR எப்படி ஜெயித்தார் .அன்றும் இதே நிலைதான் .ஸ்டாலின் ஆட்சியை குறை சொல்ல ஒன்றும் இல்லை .அப்படி இருந்தால் விஜய் தமிழ் நாட்டின் பொருளாதாரம் , போக்குவரத்து துறை மத்ரும் நீர்வளம் ,நிலவளம் என்று நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே.அவைகளில் நிறை குறைகளை பத்ரி பேசலாமே .வெறும் வாயை மென்றால் பசியாறிவிடுமா ?


Kumar Kumzi
அக் 26, 2024 11:44

வாழ்நாள் முழுதும் இருநூறு ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் கொத்தடிமையா இருக்கணும்னா இப்பிடி தான் முட்டு குடுக்கணும்


raja
அக் 26, 2024 11:52

என்னது உடன் பருப்ப... வீடியோ முஜி ஆட்சியை குறை சொல்ல ஒன்றும் இல்லையா.. பொங்கல் தொகுப்பில் 500 கோடி யில் ஆரம்பித்து முன்னாள் நிதி அமைச்சர் சொன்ன 30000 கோடி அண்ணாமலை சொன்ன டான்ஜெட்கோ ஊழல் குடி மக்கள் சொன்ன கரூர் கம்பனி ஊழல் பாட்டிலுக்கு பத்துறுவா கொள்ளை... இப்படி பல கொள்ளைகள் சொத்து வரி, குடிநீர்வர், குப்பை வரி, பத்திர பதிவு விலை ஏற்றம் காய்கறியிலிருந்து கட்டிட பொருள் வரை விலையேற்றி கொள்ளை 11.45 லிருந்து மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை இப்படி எல்லாவற்றையும் கொள்ளை இப்படி பல குறைகள் சொல்லலாம் உடன் பருப்ப...


Jysenn
அக் 26, 2024 09:31

திரிஷா சஙஹவி வருவார்களா?


nv
அக் 26, 2024 08:43

சினிமா கூத்தாடிகளின் நடிப்புக்கு பலி ஆகும் தமிழ் இளைங்கர்கள்.. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம். நன்கு படித்த தமிழ் தலைவர்களை பின்பற்றுவது நாட்டுக்கு நல்லது.. இளைய தலைமுறைக்கு நல்ல புத்தி வர வேண்டும்..


முக்கிய வீடியோ