மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025
த.வெ.க., பொதுக்குழு கூட்டத்தை ஒட்டி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை புறநகர் மாவட்ட செயலர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், 'தளபதி அவர்களை அழைத்து வரும், தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் அரசியல் ஆசான், த.வெ.க., பொதுச்செயலர், வருங்கால தமிழக முதல்வரை வரவேற்கிறோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், ''சில விஷமிகள் வேண்டும் என்றே என்னை முதல்வர் என, குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். விஜய்-க்கு கோடான கோடி தொண்டர்கள் உள்ளனர். அந்த தொண்டர்களில் நானும் ஒருவன். இந்த மாதிரி போஸ்டர்களை யாராவது ஒட்டினால், அதை பெரிதுபடுத்த வேண்டாம். என் பெயரை பயன்படுத்தி, போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டால், அது நானாகி விட முடியுமா?'' என்றார்.மாவட்ட செயலர் சரவணன் கூறுகையில், ''சென்னையில், மறைமலை நகர் பகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனக்கும் இந்த போஸ்டருக்கும் சம்பந்தம் இல்லை. ''எங்களுக்கு ஒரே தலைவர் விஜய் மட்டும் தான். முதுகில் குத்தும் வகையில் மாற்றுக் கட்சியினர், இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்,'' என்றார்.
18-Mar-2025