உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் நுகர்வு 18,000 மெகா வாட்டை தாண்டியது

மின் நுகர்வு 18,000 மெகா வாட்டை தாண்டியது

சென்னை:தமிழகத்தில் கோடை காலம் துவங்கியதால், வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுதவிர, மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தினமும் சராசரியாக, 15,000 மெகா வாட் என்றளவில் இருந்த மின் தேவை இம்மாத துவக்கத்தில், 17,000 மெகா வாட்டை தாண்டியது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மின் தேவை, 18,000 மெகா வாட்டை தாண்டி, 18,150 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இந்தாண்டில் அதிகபட்ச அளவு. இந்த கோடையில் புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ