மேலும் செய்திகள்
கூடங்குளத்தில் அணுஉலை அழுத்தக் கலன்
17-Jun-2026
சென்னை: திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 1,000 மெகாவாட் திறன் உடைய முதலாவது அணு உலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகா வாட் திறன் உடைய, இரு அணு உலை களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடங்குளம் முதலாவது அணு உலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் மாலை முதல், மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
17-Jun-2026