உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடிக்கு நல்ல புத்தி வர ஹிந்து முன்னணி கோவிலில் பிரார்த்தனை

பொன்முடிக்கு நல்ல புத்தி வர ஹிந்து முன்னணி கோவிலில் பிரார்த்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி வர வேண்டும் என ஹிந்து முன்னணி அமைப்பினர் கோவிலில் பிராத்தனை செய்தனர்.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பல்வேறு தரப்பினர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தி.மு.க.,வில் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, திருச்சி சிவா, அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என பலர் கோரிக்கை எழுப்பி உள்ளனர். இதற்கிடையில், ஹிந்து முன்னணி அமைப்பினர், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னிதியில் கோரிக்கை மனு வைத்து நேற்று பிரார்த்தனை செய்தனர். பெண்கள் குறித்து இழிவாக, தொடர்ச்சியாக பேசி வரும் அமைச்சர் பொன்முடிக்கு நல்ல புத்தி வேண்டும், அவரை அமைச்சரையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.'பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது' என ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

vijai hindu
ஏப் 13, 2025 17:29

போற நேரத்துல புத்தி வந்து என்ன பண்றது


ராமகிருஷ்ணன்
ஏப் 13, 2025 10:11

திமுகவுக்கு இந்த மாதிரியான சாத்வீக பதில்கள் உரைக்காது. மிக வீரியமான அவர்களின் பாணியில் பதிலடி தரணும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 13, 2025 10:10

அது கருவின் குற்றம்.


Pandi Muni
ஏப் 13, 2025 08:10

அட ஏண் வெட்டி பதறுகளா சாக்கடை மனக்கணும்னு வேண்டிக்கிங்கடா


pmsamy
ஏப் 13, 2025 08:08

இந்து முன்னணிக்கு நல்ல புத்தி இருக்குன்னு என்ன உத்தரவாதம்


Keshavan.J
ஏப் 13, 2025 08:00

தமிழக ஹிந்து மக்களுக்கு புத்தி வரணும் இந்த ஆளுக்கு புத்தியே இல்லை எங்க இருந்து வரும். சாராயத்துக்கும். பணத்துக்கும் பிரியாணிக்கும் வோட்டு போடும் மக்கள் உள்ளவரை இது போல் நாதாரிகளை ஒன்னும் செய்ய முடியாது. இஸ்லாமியர்கள் வெஸ்ட் பெங்கால், ராஜஸ்தான், மணிப்பூர் இங்கெல்லாம் எவ்வளவு ஒற்றுமையாக பொருள்களை நாசம் செய்து எதிர்ப்பை தெரிவிக்க்கிறார்கள் நம்ம மக்கள் மண்ணு போல் இருக்கிறார்கள்


பிரேம்ஜி
ஏப் 13, 2025 07:48

வெட்டி வேலை! நமக்குத்தான் நல்ல புத்தி வரவேண்டும்!


sridhar
ஏப் 13, 2025 07:25

இதெல்லாம் வீண் வேலை, அவனுக்கு நல்ல புத்தி வந்து நமக்கு என்ன ஆகணும். தமிழக ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு வரணும், திமுகவை புறக்கணிக்கணும். அதற்கு பிரச்சாரம் செய்யுங்க . குறிப்பா தென் மாவட்டங்களில் கிறிஸ்துவ மதத்தின் ஆட்டம் அதிகமா இருக்கு .


ஆதிநாராயணன்
ஏப் 13, 2025 06:55

தயவு செய்து இந்த நடுநிலை இந்துககளுக்கு புத்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் அது தான் சரியாக இருக்கும் அவர்கள் இந்த மாதிரி ஆட்கள் உள்ள கட்சியை புறக்கணிக்க கற்றுக் கொண்டால் இது போன்ற ஆணவ பேச்சுக்கள் இல்லாமல் போய் விடும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 13, 2025 06:52

ஒருத்தன் தெரியாம, யோசிக்காம, மத்தவங்க மனசு புண்படுற மாதிரி ஏதாச்சும் உளறிட்டா அவனுக்குத்தான் திருந்த வேண்டிய அவசியம் இருக்கு ..... பிளான் பண்ணி மடைமாற்றம் பண்ணுறதுக்காகப் பேசுறவன் ஏன் திருந்தணும் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை