உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக., 3 முதல் பிரேமலதா பிரசாரம்

ஆக., 3 முதல் பிரேமலதா பிரசாரம்

சென்னை : தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தன் முதற்கட்ட பிரசாரத்தை ஆகஸ்ட் 3ல் துவங்கவுள்ளார்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, தே.மு.தி.க., தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டணி தொடர்பான அறிவிப்பை, ஜனவரி 9ல், கடலுாரில் நடக்கும் மாநில மாநாட்டில் அறிவிக்கப் போவதாக அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா கூறி வருகிறார். இந்நிலையில், தன் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை, ஆகஸ்ட் 3ம் தேதி துவங்குவதாக பிரேமலதா அறிவித்துள்ளார்.தமிழகத்தின் அக்னி மூலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அமைந்துள்ளது. இங்கு, எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க., தலைமைக்கு உள்ளது. இங்கிருந்து தான் தன் தேர்தல் பிரசாரத்தை, தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் துவங்குவது வழக்கம். அதன்படி, பிரேமலதாவும் அங்கிருந்து பிரசாரத்தை துவங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை, தே.மு.தி.க., வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 15, 2025 08:05

யாரை எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறார்... கேப்டன் முகம் பார்த்து வாக்களித்தவர்கள் இன்று கேப்டனே இல்லை என்றானபின்.. கேப்டனின் ரசிகர்கள் யாருக்காக ஓட்டளிப்பார்கள்.. இருக்கும் 0.5% சதவிகிதம் ஓட்டு வங்கியை வைத்து கொண்டு இவரின் அட்ரா சிட்டி இருக்கே அப்பப்பா....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை